பக்கம்:கல்வி உளவியல்.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 கல்வி உளவியல் மதிப்பிடுகின்றன். அவன் தன் அன்னையிடம் கொண்டுள்ள அன்புப் பற்று அவனுடைய வாழ்விலும் நடத்தையிலும் ஓர் ஒருமைப்பாடு, ஒழுங்கு, நிலைப்புத்தன்மை, தொடர்ச்சி முதலியவற்றை உண்டாக்கிவிடு கின்றது. தனிப்பட்ட ஒரு பற்று வளர்ந்து இயல்பூக்க வாழ்க்கையை ஒழுங்கும் இசைவும் கூடியதாகச் செய்வதைப் போலவே, பற்றுக்கள் யாவும் ஓர் ஒழுங்கில் அமைந்து ஒன்ருேடொன்று இணைந்த அமைப்பாக வளர்கின் றன. தாழ்ந்த பற்றுக்கள் உயர்ந்த பற்றுக்களாகவும், உயர்ந்த பற்றுக்கள் முதன்மைப்பற்ருகவும் வளர்கின்றன. நாட்டுப்பற்று எவ்வாறு வளர் கின்றது என்பதை எடுத்துக்காட்டாகக் கொண்டு இதனைவிளக்குவோம். சிறுவன் முதலில் பெற்றேரிடம் பற்று கொள்கின்ருன் ; இப்பற்று நாளடைவில் விளையாட்டுத் தோழர்கள், பிற குடும்பங்கள், ஆசிரியர்கள், பள்ளிகள், மாவட்டம் போன்றவற்றின் பால் முறையே விரிந்துசெல் கின்றது. குடும்பப் பற்று முதலியவை முறையே ஒவ்வொன்றுக்கும் தாழ்ந்தவையாக அமைந்து காட்டுப்பற்றுக்கு முதன்மை கொடுத்தன. நாட்டுப்பற்றும் தாழ்ந்த பற்ருக அமைந்து மானிட இனப்பற்றை முதன் மையுடையதாக ஒப்புக்கொள்ளலாம். மானிட இனத்தின் நலத்தை நம் முடைய வாழ்க்கையின்பயணுகக் கொண்டால், நம்முடைய தன்-மதிப்புப் பற்றுத் தலையோங்கி ஏனைய பற்றுக்கள் யாவற்றையும் அடக்கியாளக் கூடியதாக அமையும். இதன் வளர்ச்சியே நமது ஒழுக்கத்தின் வளர்ச்சி என்று கூறலாம். எனவே, ஒழுக்க வளர்ச்சியில் உள்ளக் கிளர்ச்சி நிலை, காட்சிப் பொருள் பற்றுகிலை, அறப்பற்று நிலை, தன்-மதிப்புப் பற்று நிலை என்ற நான்கு படிகளைக் காண்கின்ருேம். பற்றுக்களும் நடத்தையும் : பற்றுக்களே நடத்தையை அறுதியிடு கின்றன. அவை நடத்தையின் ஒவ்வொரு பாகத்திலும் பிரதிபலிக்கின் றன. காலையில் செய்தித்தாள்கள் படிப்பதற்கு வருகின்றன. பலர் அவற்றைப் படிக்கின்றனர். ஒருவர் உள்நாட்டு அரசியல் செய்திகளையும், மற்ருெருவர் விளையாட்டுப் பகுதிகளையும், பிறிதொருவர் விளம்பரப் பகுதிகளையும், இன்ளுெருவர் வெளிநாட்டு அரசியல் செய்திகளையும் ஊக்கமாகப் படிப்பதைக் காணலாம். இதல்ை அவரவருடைய வாழ்க் கைப் பற்றுகள் இன்னவை என்பதை அறியலாம். எனவே, ஒருவருடைய பற்றுக்களே அறிந்தால், அவருடைய நடத்தை எப்படியிருக்கும் என்பதை முன்னரே உரைத்து விடலாம். ஆகவே, நாம் அடிக்கடி பழகும் மனிதர்களின் பற்றுக்களை அறியவேண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/396&oldid=778358" இலிருந்து மீள்விக்கப்பட்டது