பக்கம்:கல்வி உளவியல்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒழுக்க வளர்ச்சி 375 டியது இன்றியமையாததாகின்றது; அவருடைய நடத்தையை உற்று நோக்குதல் மூலந்தான் இவற்றை அறியலாம். பற்றுக்கள் நடத்தையை ஓரளவு ஒருமைப்பா டடையச் செய்யுமாயி லும், உள்ளக் கிளர்ச்சிகளைப் போலவே இவையும் கடத்தையைப் பல திக்குகளில் கொண்டு செலுத்தும். இப்பற்றுக்களை அடக்கியாள ஒரு தலைமைப்பற்று இன்றியமையாதது. இவற்றைக் கீழே காண்போம். சிறுவர்களின் நடத்தையில் பற்றுக்கள் எங்ங்ணம் பங்கு கொள்ளு கின்றன என்பதைச் சற்று ஆராய்வோம். சிறுவன் ஒருவன் தந்தையின் அறிவைக் கண்டு வியக்கின்றன். பிறகு ஆசானது அறிவு அவனுக்கு வியப்பினை விளைவிக்கின்றது. அறிவுள்ள இவர்களிடம் அவனுக்கு அன்பு உண்டாகின்றது. பிறகு தலைமையாசிரியரின் அறிவு, பள்ளியில்பலகிகழ்ச்சி களில் பங்கு கொள்ளும் பெரியார்களின் அறிவு அவன் உள்ளத்தைக் கவர்கின்றன. இவர்களிடம் பற்று ஏற்படுகின்றது. நாளடைவில் இப் பற்று அறிவுபற்றிய பற்ருக மாறுகின்றது. அறிவைப் பெறுவதையே முதன்மைப் பற்ருகவும் அவனிடம் அமையலாம்; அதே அவனுடைய தன்-மதிப்புப் பற்ருகவும் வடிவு பெறலாம். "அறிவுடையார் எல்லாம் உடையார்” என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு இதனை உறுதிப் படுத்தவும் செய்யலாம். சிறந்த அறிவினைப் பெறுவதையே அவன் வாழ்க்கைப் பயனுகக்-குறிக்கோளாகக்-கருதிப் பிறவற்றைத் தாழ்க் தவையாக எண்ணலாம். அறிவைப்பற்றிய பற்று இவ்வாறு தோன்றும்: அறிவுத் தொடர்புள்ள செய்திகளில் வியப்பு அடைவான்; தன் அறிவை வெளியிடுங்கால் தன்னெடுப்பும், தன்னின் மிக்க அறிவுடையாரைக் காணுங்கால் தன்னெடுக்கமும் அவனிடம் காணப்பெறும். சிறந்த நூல் களைப் படிப்பதிலும், அவற்றைத் திரட்டுவதிலும் அவனிடம் ஆர்வம் தலை காட்டும். இங்ங்ணம் அவனுடைய வன்மையான உள்ளக் கிளர்ச்சிகள் யாவும் அறிவையொட்டியே காணப்பெறுகின்றன; ஒருமைப்பாடும் அடைகின்றன. ஏனைய பற்றுக்களைவிட அறிவுப்பற்றே இவனிடம் மீதுார்ந்து நிற்கும்; இதுவே வாழ்க்கையில் முக்கியமானதாகவும் தோன்றும். இன்ைெருவன் அரிச்சந்திரனைப்போல் சத்தியத்தையே குறிக்கோள் பொருளாகக் கொள்ளலாம். பிறிதொருவனுக்குக் காவியத் தலைவர்கள் குறிக்கோள் பொருள்களாக அமையலாம். திருத்தொண்டர் புராணத்தில் வரும் அடியார்களின் வாழ்க்கை சிலருக்கு இலட்சியமாக அமையலாம். எனவே, வாழ்க்கையின் குறிக்கோள் ஒருவருடைய நடத்தையைத் தீர் மானிக்கின்றது. அதன் பொருட்டு அவர் எதையும் துறப்பதற்கு ஆயத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/397&oldid=778360" இலிருந்து மீள்விக்கப்பட்டது