பக்கம்:கல்வி உளவியல்.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒழுக்க வளர்ச்சி 377 நடந்துகொள்வர். அவர்களின் செயல்களில் ஏதேனும் குறை இருப் பதைச் சுட்டியுரைத்தால் அவர்கள் காணமுற்று அதனை நீக்க முயலுவர். அங்ஙனமின்றி பிறர் தம்மைத் தீயவர்கள், பயனற்றவர்கள், நம்பிக்கை யற்றவர்கள், சோம்பர்கள் எனக் கருதினுல், அவர்களும் தம் கொடு மையை உறுதி செய்துகொள்வர் ; அத்தகைய செயல்களில் செருக்கும் கொள்வர். எனவே, சரியான மதிப்பைச் சிறுவர்களிடம் அமையச் செய் வது கல்வியாளர்களின் கடமையாகும். "நீ அங்ங்ணம் செய்வாய் என்று நான் கருதவில்லை”, “நீ புரியும் செயலா அது?”, “ஒருகணித ஆசிரியன் மகளு இந்த மதிப்பெண் பெறுவது?’ என்பன போன்ற துண்டுரைகள் சிறுவர்களின் தன்மதிப்பைச் சிறந்த முறையில் வளர்க்கத் துணை செய்யும்; இத்தகைய புகழுரைகள் அவர்களின் செயல்கட்கு ஒருமைப்பாடுதரும்; உயர்ந்த சமூகத்தில் சிறந்த உறுப்பினர்களாகச் செய்யும். அவை அவர் களுடைய தன் மதிப்பு, தன்மானம், ஒழுக்கம் ஆகியவற்றை வளர்க்கும். முதலில் அவர்கள் குறிக்கோளையொட்டி வாழ முயலுவர்; முதலில் குறிக் கோள்.தான்” (ideal-self) என்பதற்கு மதிப்புத் தந்து பிறகு அது பிறப் பிக்கும் ஆணைகளுக்கும் கீழ்ப்படிந்து கடப்பர். இங்ஙனம் தன் மதிப்புப் பற்று வளர்ச்சியுற்று வாழ்க்கையில் ஒருமைப்பாடும் நிலைப்புத்தன்மை யும் அமையக் காரணமாகின்றது. இத்தகைய தன்-மதிப்பை வளர்க்கும் பொருட்டே தற்காலத்தில் இளங்குற்றவாளிகள்’ சிறைச்சாலைக்கு அனுப்பப்பெருமல் திருத்தச் சாலைக்கு அனுப்பப் பெறுகின்றனர். ஒருவருடைய விருப்பு வெறுப்புக்கள் நிறைவேறினல் களிப்பு" உண்டாகின்றது; அவை நிறைவேறவிடின் அருவருப்பு'க் கொள்ளச் செய்கின்றது. சில சமயம் இவ்வருவருப்பு வாழ்க்கையிலேயே வெறுப்புத் தட்டும் அளவுக்குக்கூட வளர்ந்துவிடுகின்றது. முதலில் தன்-மதிப்புப் பற்று குடும்பத்தையொட்டி அமைகின்றது; நம்முடைய விருப்பு முழுவ தும் இந்த வட்டத்திலேயே சுழலுவதால், அங்கு நாம் களிப்படைகின் ருேம்; அல்லது ஊக்கமிழந்து நிற்கின்ருேம்.நாளடைவில் இவ்வட்டம் விரி வடைகின்றது;தன்னயொத்தவர்களிடையே பள்ளிச்சிறுவன் தன்னெடுப் பும் தன்னெடுக்கமும் கொள்கின்றன். இங்ங்ணம் வாழ்க்கை முழுவதும ஒப்பாரின் ஏற்பையே (மதிப்பு) அவாவி நிற்கின்ருேம். ' அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டு மிகைமக்க ளான்மதிக்கற் பால' is gerägåparañáš - juvenile offenders. ** assau - elation 1 7 » Geuosúq- disgust. a *#*®®®äsä-self-abasement. * • sùum ir peers. 20 smso - 163.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/399&oldid=778364" இலிருந்து மீள்விக்கப்பட்டது