பக்கம்:கல்வி உளவியல்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர் திரு ஜி. ஆர். தாமோதரன் அவர்கள் (Principal, P, S. G. Coj lege of Technology, Peelamedu) மனமுவந்து அளித்த அணிந்துரை 'கல்வி உளவியல்' என்ற இந்நூ லின் வாயிலாகப் பேராசிரியர் க. சுப்பு ரெட்டியார் அவர்கள் தமிழுக்குச் சிறந்த தொண்டு ஆற்றியுள்ளார். இந்நூல் மாணவர்களுக்குப் பாடங் கற்பிக்கும் ஆசிரியர். களுக்கே யன்றித் தம் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் பெரிதும் காட்டமுடைய தமிழ்ப் பொது மக்களுக்கும் மிகவும் பயனளிப்பதாகும். இத்தகைய நூல்கள் தற்போது தமிழ்நாட்டிற்கு மிகமிகத் தேவையாகும். இதுவரை கல்வி உளவியலைப்பற்றி வெளிவந்துள்ள தற்கால அரிய கருத்துக்களை மிகச் செம்மையான முறையில் இந்நூலில் அமைத்து விளக்கியுள்ளார் இந்நூலாசிரியர். இவர் தம் வகுப்பறையில் உளவியலைப் பயன்படுத்திப் பாடம் கற்பிப்பவர் என்பது இந்நூலினின்று கன்கு விளங்குகின்றது. தற்காலக் கல்வியியல் கொள்கைக்கும் நம் பழைய இலக்கியங்களிலிருந்து புலனுகும் பழங்காலக் கொள்கைகளுக்கும் ஒற்றுமை காணும் இவர் திறத்திலிருந்து இவர்தம் உளவியல் நுட்பம் புலளுகின்றது. சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்' என்ற பாரதியாரின் ஆணையை இவர் கிறைவேற்றியுள்ளார் எனலாம். அடிக்குறிப்பாகப் பல கலைச்சொற்களுக்கு நேரான ஆங்கிலச் சொற் கள் தரப்பட்டுள்ளன. இவற்றைத் திரட்டி நூலின் இறுதியில் பின் னிணைப்பு-2 என ஆசிரியர் இணைத்துள்ளார். இது மிகவும் பயனளிப்ப தாகும். கல்லூரித் தமிழ்க் குழுவினர் வெளியிட்டுள்ள உளவியல் தமிழ்க் கலைச்சொற்களை இவர் தம் நூலில் பெரிதும் பயன்படுத்தி யிருப்பது போற்றுதற்குரியது. இந்நூல் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கும் கலைவளர்ச்சியில் காட்டமுள்ள பெருமக்களுக்கும் பெரும் பயன் அளிக்கும் என்பதில் ஐயமில்லை. பீளமேடு 歌 - 9–1–1961 ஜி. ஆர். தாமோதரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/4&oldid=778365" இலிருந்து மீள்விக்கப்பட்டது