பக்கம்:கல்வி உளவியல்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வி உளவியலின் இயல்பும் அளவும் 19 நோயாளி ஒவ்வொருவரைப்பற்றியும் பல விவரங்கள் தயாரிப்பதை நாம் அறிவோம். அதுபோலவே குழந்தைகளுடனும், பல முறை உரையாடிச் செய்திகளை வருவிக்கலாம். ஏதாவது குறைபாடுகள் காணப்பெறின், அவற்றை இன்னவை எனக் கண்டறியவும் (diagnose) அவற்றிற்குரிய காரணங்களையும் பரிகாரங்களையும் தேடவும் இம் முறை பயன்படுகின்றது. மனிதனுடைய நோய்களைக் குணமாக்க வேண்டிய எல்லாச் சாதனங்களும் உளவியலாரிடம் இன்மையால் அவர் அடிக்கடி மருத்துவர் உதவியினை நாடவேண்டியுளது. கற்றலிலும், பிறருடன் பழகுதலிலும் குழந்தைகளிடம் குறைகள் காணப்பெறலாம் ; அல்லது காரணமற்ற பயன் ஏற்படலாம். இவற்றை யெல்லாம் ஆராய்ந்து விளக்க இம் முறை பயன்படுகின்றது. மேடுைகளில் பொதுப் பள்ளிகள், சிருர் நீதி மன்றங்கள், கொலைக் குற்ற நீதி மன்றங்கள், சிறைச் சாலைகள், மருத்துவ நிலையங்கள் போன்றவற்றுடன் உளவியல் மருத்துவ கிலேயங்கள் இணைக்கப் பெற்றுள்ளன. தனியார் கடத்தும் இவ்வித நிலையங்களும் ஆங்குள. உளவியலார் கவனிக்க வேண்டிய எல்லா வயது நிலையிலுள்ளவர்களும் இவண் கொணரப்பெறுகின்றனர். இங்குப் பல்வேறு சோதனைகளுக்கு அவர்களை உட்படுத்தித் தேவையான விவரங்களைத் திரட்டுகின்றனர். இவ் விவரங்களுடன் தனியாள் வரலாறும் சேர்கின்றது. ஆய்வு முறை : இதனைச் சோதனை முறை என்றும் செய்காட்சி முறை என்றும் வழங்குவதுண்டு. இம் முறையில் நாம் ஆராய வேண்டிய கூறுகளே கன்கு கட்டுப்படுத்திகொள்ளவேண்டும். அறிவியலார் இம் முறையைச் சிறப்பாகக் கையாளுகின்றனர். இரண்டு எடுத்துக்காட்டுக் கள் தருவோம். ஒன்று, சில செடிகொடிகள் மிகச் சூடான கிலத்தில்தான் விளைகின்றன. குளிர்காட்டில் வாழ்வோர் இச்செடிகொடிகளைப்பற்றி ஆராய வேண்டுமாயின், திரைகடலோடியும் தேடியுமே ஆராயவேண்டும். அக் குளிர்காட்டினர் அவ்வாறு உழலாது சூட்டறை ஒன்றினைச் செயற்கை முறையில் அமைத்து அதில் இச் செடிகொடிகளைப் பயிர் செய்வித்து ஆராய்கின்றனர். இரண்டு, முற்காலத்தில் மின்ற்ைறலைப்பற்றி அறிய இடி, மின்னல் இவை உண்டாகிறவரையில் காத்திருக்க வேண்டியிருந் தது. இப்பொழுது ஆய்வகத்தில் மின்னுற்றலை வருவித்து ஆய்கின்றனர். வேண்டியவற்றை வேண்டிய இடத்தில் வேண்டிய பொழுதில் வேண்டிய அளவில் ஆயத்தம் செய்வதே ஆய்வுமுறையின் சிறப்பாகும். இதில் நாம் க3 தனியாள் வரலாறு - case history. 54 hil sų (p6op-experimental method.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/40&oldid=778367" இலிருந்து மீள்விக்கப்பட்டது