பக்கம்:கல்வி உளவியல்.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 கல்வி உளவியல் மாளுக்கர்களிடம் மன உறுதியை வளர்க்க வேண்டுமாயின், பள்ளி களில் அவர்கள் தாமாகச் செயலாற்றவும் பொறுப்பேற்கவும் வாய்ப்புக் களை நல்குதல் வேண்டும். தன்ட்ைசி முறை, தனிவேலை, குடிமைப் பயிற்சி போன்ற துறைகளில் ஆசிரியர் மேற்கொள்ளும் முயற்சிகள் இதற்குப் பெரிதும் பயன்படும். அனுபவமின்மையால் மாளுக்கர்கள் தவறு இழைத்தல் கூடும் என எண்ணி அவர்கள் செய்யவேண்டிய முடிவுகளை நாமே அவர்களுக்காக இயற்றுவதில் அவர்களுக்கு நலம் பயக் காது என்பதை நாம் உணர்ந்து வருகின்ருேம். உரமான உறுதியுள்ள பெற்றேரின் குழந்தைகளில் பலர் உரமற்ற மன உறுதியுள்ளவர்களாக இருப்பதற்குக் காரணம் என்ன? பெற்றேர் தம் பிள்ளைகளுக்கு மனஉறுதி யில் பயிற்சி யளிக்காமையே. சிறுவயதிலிருந்தே தவறிழைக்காது தடுக் கப்பெற்ற ஒருவன் வளர்ந்தவனை பிறகு பரந்த இவ்வுலகில் தன் அலு வல்களைத் திறமையுடன் மேற்கொள்வான் என்று கருதுவது பயனற்ற செயலே. செயல் தவருகப் போகுமென்று அஞ்சி சரியானதையும் இயற் றத் துணிவு இல்லாதவரை உண்டாக்கும் கல்வி முறையால் யாது பயன்? இது கல்வி தன் கடமையில் தவறியத்ாக முடியுமல்லவா? சில சமயம் பயிற்சியளிக்கும் அளவு அளவு மீறவும் கூடும். அளவுக்குமீறில்ை அமிர் தமும் நஞ்சு அன்ருே ? அளவுக்கு மீறிஞல் பிடிவாதமும், முரட்டுத் தனமுமே விளைவுகளாக வந்து சேரும். ஆயினும், நெறிக்கல்வியில்?? துணி தலுக்குப் பயிற்சி தருவதையும் சேர்க்கவேண்டும். ஒழுக்கப் பயிற்சியில் அறிவு நிலைக் கூறுக்கும் உணர்ச்சி நிலைக் கூறுக்கும் தக்க கவனம் செலுத்தப் பெற்ருல், துணிதலின் பயிற்சி அறிவுட்ைணையாகவும் இருக் கும்; நன்மையானதாகவும் அமையும். குறிக்கோள்களும் வாழ்க்கைத் தத்துவ வளர்ச்சியும் முழுத் தன்மை பெற்ற ஒழுக்குத்தில் சில குறிக்கோள்கள் நிச்சயம் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை நாம் உறுதியாகக் கூறலாம். ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.”* என்ற குறள் காட்டும் ஒழுக்கம் இத்தகையதே. சமூகம் பாராட்டும் அல்லது பழித்துக் கூறும் நடத்தையைவிடக் குறிக்கோள்கள் நெறிப்படுத் தும் நடத்தையே மிக உயர்ந்தது. இங்ங்னம் தம்மிடமுள்ள உள்ளொளி யால் இயங்குவோர் ஒரு சிலரே சமூகத் தாக்குதல்களை அவர்கள் சிறிதும் பொருட்படுத்தமாட்டார்கள். இவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் saglio&ssosol - moral education; so Gipsir - 131.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/402&oldid=778373" இலிருந்து மீள்விக்கப்பட்டது