பக்கம்:கல்வி உளவியல்.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒழுக்க வளர்ச்சி 38翼 மறைந்து கிடப்பர். இத்தகைய குறிக்கோள்கள் குழந்தையின் வாழ்க் கையில் மிக மெதுவாக ஏற்படுகின்றன; அவை பெரும்பாலும் குழந்தை அதிகமாக மதிக்கும் அல்லது விரும்பும் மக்களிடமிருந்தே-(எ-டு) பெற் ருேர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள்-கருத்தேற்றத்தின்*மூலம் அமை கின்றன. அறப்பற்றுக்கள் எங்ங்னம் வளருகின்றன என்பதை மேலே உரைத்தோம். அதை இன்னும் சற்று விளக்குவோம். மாக்கேல் என்ற உளவியல் அறிஞர் முக்கியமாகத் தொற்றுநோய் போன்ற ஒத்துணர்ச்சி யாலும், சிறந்த பெரியோர்களின் கருத்தேற்றத்தாலும் அவை உண்டா கின்றன” என்று கூறுகின்ருர், சிறுவர்களின் வீர-வழிபாட்டாலும் * இவை ஏற்படுகின்றன. பெரும்பாலோரது வாழ்வில் இந்த உயர்ந்த சமூக வளர்ச்சியைப் பெறுவதற்கு வாய்ப்புக்கள் அமைவதில்லை. சிறந்த அருங் குணங்களைக் கொண்ட உயர்ந்த தலைவர்களை அடிக்கடிச் சந்தித்து அவர்களுடன் பழகும் வாய்ப்புக்களும் ஏற்படுவதில்லை. அன்றி யும், அவர்கள் பழகும் தலைவர்களிடமும் பல குறைகள் குன்றின்மேல் விளக்குபோல் வெளிப்படையாகத் தெரிகின்றன. சிலர் நூல்களின் மூலம் உயிர்ப்பையும் உற்சாகத்தையும் பெறுகின்றனர்; ஆல்ை, நேர் முறையில் சிறந்த பெரியோர்களின் வாயிலாகப் பெறும் குறிக்கோள்களே நிறைந்த பலன்களை விளைவிக்கும். ஒரு குறிக்கோள்மீது நாம் கொள்ளும் ஆர்வத்திற்கேற்ப அதனை அடைய முற்படுவோம். நாம் மேற்கொள்ளும் குறிக்கோளைப்பற்றித் தெளிவான கருத்துடன் பல இடர்ப்பாடுகளையும் பொருட்படுத்தாது அவற்றை எதிர்த்துக் குறிக்கோளை நோக்கி முன்னேறி ஞல், கல் வாழ்க்கையின் சிகரத்தை எட்டிப் பிடிக்கலாம். குறிக்கோள் வளர்ச்சியால் உண்டாகும் வாழ்க்கைத் தத்துவம் கம் மனத்தையும் செயலையும் நெறிப்படுத்துகின்றது. வாழ்க்கைத் தத்துவம் என்பது ஓர் அரும்பொருளாக இருப்பினும், நாம் எல்லோரும் அறிந்தோ அறியாமலோ அதனை அமைத்துக்கொண்டுள்ளோம். நாம் மேற்கொண் டுள்ள குறிக்கோள்களுக்கேற்ப, வாழ்க்கையில் பலவற்றைத் தேர்ந் தெடுக்கின்ருேம். குணம் நாடிக் குற்றம் நாடி, அவற்றுள் மிகை நாடி மிக்க கொள்கின்ருேம். குணமும் குற்றமும் அவரவர் கொண்டுள்ள குறிக் கோள்களைப் பொறுத்தவை. சிறந்த கல்வியின் நோக்கம் என்ன என் பதை வள்ளுவப் பெருந்தகை, கற்றதல்ை ஆய பயனென்கொல்? வாலறிவன் நற்ருள் தொழாஅர் எனின்.: * 4 =G535jöpå - suggestion. ** 6875ugum G - hero-worship. 38 குறள் - 2.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/403&oldid=778377" இலிருந்து மீள்விக்கப்பட்டது