பக்கம்:கல்வி உளவியல்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 கல்வி உளவியல் என்று கூறுவர். அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயனே’** என இலக்கண் நூல் கூறும். இவையே நமது தன்-மதிப்புப் பற்ருக அமை தல் வேண்டும். இந்த உயர்ந்த குறிக்கோள்களின் வளர்ச்சி குடும்பம், பள்ளி, சமூகம் என்ற சூழ்நிலைகளைப் பொறுத்தது. ஒழுக்கத் துலக்கத்தில் பள்ளியின் பங்கு குழந்தையின் வளர்ச்சி குடும்பத்தில் தொடங்குகின்றது. எனவே, குடும்பத்தின் பொறுப்பு அவ்வளர்ச்சியில் அதிகமாகின்றது. என்ருலும், பள்ளிகட்கும் இத்துறையில் சிறந்த பொறுப்பு இருக்கத்தான் செய் கின்றது. உயர்ந்த குறிக்கோள்களையும், தன்-மதிப்புப் பற்றையும் மனத் திண்மையையும் வளர்ப்பதில் பள்ளிக்குச் சிறந்த பங்கு உண்டு; அதை அது எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும். பள்ளி அதற்கெனவே ஏற் படுத்தப் பெற்ற ஒரு கிலேயமாகும். இப்பணியை திறம்படச் செய்ய வேண்டுமென்பதற்காகவே தனிப் பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் அங்கு நியமிக்கப் பெறுகின்றனர். தன்-மதிப்புப் பற்று சமூகம் ஏற்படுத்தும் பண்பு என்று மேலே கண் டோம். வழிவழியாக வந்துகொண்டிருக்கும் பள்ளியின் மரபு, அதன் கூட்டு வாழ்க்கை, பள்ளியில் ஏற்பாடு செய்யப்பெற்றிருக்கும் விள்ை யாட்டு வகைகள், பயிற்றும்முறை, பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் களின் செல்வாக்கு முதலியவை மாளுக்கர்களிடம் தனிப்பட்ட முறை யிலும் கூடிவாழ்முறையிலும் பயன்படும் சிறந்த பற்றுக்களை வளர்க் கின்றன; இவை தக்க முறையில் நெறிப்படுத்தப்பெற்றுத் தன் மதிப்புப் பற்ருக அமைந்தால் சிறந்த முறையில் ஒழுக்கம் அமையும். பயிற்றும் ஆசிரியர்களும் உடன்பயிலும் தோழர்களும்குழந்தையிடம் தன்-மதிப்பை உண்டாக்குபவர்கள். அவர்கள் எதிர்பார்க்கும்முறையில் தான் குழந்தை நடந்து கொள்ளும். அவனிடம் அமையும் குறிக்கோள்கள் பயிற்றும் ஆசிரியர்களாலும், பயிலும் பாடங்களாலும், உடனிருந்துயாடங் கேட்கும் ஏனைய தோழர்களாலுமே ஏற்படும். ஆசிரியரின் புகழுரைகள், கடுஞ் சொற்கள், செயல்கள், உணர்ச்சிகள், அறிவு போன்றவைகளும் பரிசில்கள், தண்டனைகள் போன்ற ஏற்பாடுகளும் அவனிடம் பற்றுக்களை உண்டாக்கும். இவற்றைச் சரியாக உணராத ஆசிரியர்கள் மாணுக்கர் களுக்குக் குறும்புக்காரன், ஒழுங்கற்றவன், மடையன், போக்கிரி என்ற பட்டங்களை வழங்குகின்றனர்! இதல்ை பலர் இப்பட்டங்களை ஏற்றுஅவை உறுதியாகுமாறு கடந்து கொள்கின்றனர்! இப்படிப் பயனற்றுப்போகும் 37 கன்னூல் . சூத். 10. 88 to go - tradition.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/404&oldid=778379" இலிருந்து மீள்விக்கப்பட்டது