பக்கம்:கல்வி உளவியல்.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒழுக்க வளர்ச்சி 383 மாளுக்கர் எண்ணிறந்தோர். இவற்றை எதிர்க்கும் ஒருசில துணிவான மாளுக்கர்கள் ஆசிரியர்களுக்கே பட்டமளிப்பு விழா நடத்தி விடு கின்றனர்! வகுப்பறைகளிலும், விளையாடுகளங்களிலும், பிற இடங்களிலும் மாளுக்கர்களிடம் தன்னம்பிக்கையும் தன்-மதிப்பும் வளர வாய்ப்புக்கள் நல்குதல் வேண்டும். மன உறுதி வளரவும், சிறந்த பழக்கங்களை வளர்க் கவும் இடம் தரவேண்டும். எச்செயல்கள் செய்தாலும் அவற்றின் நோக் கங்களை மாளுக்கர் அறியச் செய்தல்வேண்டும். நோக்கங்கள் அடைய வேண்டும் என்று மாளுக்கர்கள் தாமாக முயன்ருல்தான் மனத்திண்மை வளரும். சொந்தக் கவர்ச்சிகளின்றேல் சுறுசுறுப்பும் விடாமுயற்சியும் தோன்ரு. மாளுக்கர்கள்முன் வைக்கப்பெறும் நோக்கங்கள் விரைவில் அடையக் கூடியனவாக இருத்தல்வேண்டும். எந்தவேலையிலும் கிர்ப்பகத மும் பலவந்தமும் கூடா; எதையும் விடுதலை யுணர்ச்சியுடன் செய்தால் தான் மனத்திண்மை வளரும். தேர்வுக்குமுன் மாளுக்கர்களால் செய்யப் பெறும் வேலை ஆண்டின் தொடக்கத்தில் செய்யப்பெறுவதில்லை என்பது நாம் அறிந்ததே. இதிலிருந்து ஆசிரியர்கள் கற்பிக்கும் முறைகளிலும் பிறவற்றிலும் பல படிப்பினைகளை அறிந்து கொள்ளலாம். பாடங்கள் சம் பந்தமாகப் பல திட்டங்களை ஏற்படுத்திக்கொண்டு அவற்றை நிறைவேற்ற வாய்ப்புக்கள் தரலாம். இன்றைய குடிமைப்பயிற்சியிலுள்ள பல நற்கூறு களைக்கொண்டு இவற்றை எளிதில் அமைக்கலாம். சிறிய செயல்களி லும் பெரிய செயல்களிலும் பொறுப்பு மாளுக்கர்களுடையதாக அமைக் தால் அனைத்தும் சீர்படும். வரலாற்றுப் பாடங்கள், இலக்கியப்பாடங்கள், அறிவியலறிஞர் களின் வ்ரலாறுகள் போன்றவற்றிலிருந்து பல அறிஞர்கள், ஒழுக்க சீலர்கள், தொண்டர்கள் போன்றவர்களின் குறிக்கோள்களைகொண்டு மாளுக்கர்கள் தமக்கு வேண்டிய குறிக்கோள்களை ஏற்படுத்திக்கொள்ளு கின்றனர். எனவே, அதற்கேற்ற பகுதிகள் பாடங்களில் அமையுமாறு: செய்தல் வேண்டும். பள்ளி நூலகங்களிலும் மாளுக்கர்களின் பல கிலை களுக்கேற்ப அவர்களே படித்தறிந்து கொள்ளக்கூடிய இத்தகைய வர லாறுகள் அடங்கிய பல புத்தகங்களை வாங்கி வைத்து அவற்றை அவர்களே விரும்பிப்படிக்கும் வாய்ப்புக்களையும் நல்குதல் வேண்டும். ஒழுக்கக் கல்வி தரும் நேரங்களில் உண்மையின் இன்றியமை யாமையை உணர்த்தவும்,பொய்யின் விரும்பத்தகாமையை வற்புறுத்தவும் சிறு சொற்பொழிவுகள் நடத்துவதால் பயனில்லை. இவை நன்கு அமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/405&oldid=778381" இலிருந்து மீள்விக்கப்பட்டது