பக்கம்:கல்வி உளவியல்.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒழுக்க வளர்ச்சி 385 ஒழுக்க வளர்ச்சியில் பள்ளியின் முயற்சியையும் வீட்டின் முயற்சியையும் இயைபுறுத்தல் பள்ளியும் வீடும் இரண்டு சிறந்த கல்வி கிலேயங்கள். ஒழுக்கம் மிகச்சிறிய பருவத்திலேயே அமைவதால், அதில் வீடு அதிகப் பங்கினைப் பெறுகின்றது. மாணுக்கர்களின் வாழ்க்கையில் பள்ளியில் கழியும் கோமே அதிகம் என்பதை எவரும் அறிவர். எனவே, வீட்டில் நடைபெறும் கிகழ்ச்சிகள் அவன் பள்ளியில் பெறும் கல்வியைப் பாதிக்கச் செய்கின் றன. ஆகவே, பள்ளி இயற்ற விரும்பும் வினைகளனைத்தையும் தாளுகவே சாதித்துவிட முடியாது. ஒழுக்கம், ஆளுமை, குடிமை ஆகிய பண்புகள் மாணுக்கர்களிடம் வளர்ப்பதற்கும், மாளுக்கர்களிடம் விரும்பத்தக்க பழக்கங்களையும் மனப்பான்மைகளையும் உண்டாக்கு வதற்கும், பெற்ருேளின் உட்கருத்தை யறிந்து குழந்தைகளின் வளர்ச்சி யில் அவர்களின் துணையைப் பெறுவதற்கும் பள்ளி தன் வேலையை வீட்டு வேலையுடன் இயைபு படுத்த வேண்டும்; இரண்டும் இணைந்து நெருங்கிப் பிணைந்து போக வழிவகைகளை வகுக்க வேண்டும். பெற்றேரின் உட்கருத்தும் மாளுக்கர்களின் செயலைப் புரிந்து கொள்ள விரும்பும் ஆசிரியருக்குப் பெரிதும் பயன்படும். குழந்தையின் உடல்நிலை, குழந்தைவாழும் இல்லத்தின் சூழ்நிலை, அங்குள்ள கவர்ச்சி கள், சுற்றுப்புறச் சூழ்நிலைகள், வீட்டில் அவனுடைய நடத்தை முதலிய வற்றை ஆசிரியர் நன்கு அறிந்துகொண்டால்தான் ஆசிரியரும் தம் தொழிலைத் திறம்படச் செய்ய முடியும். ஆசிரியர் அடிக்கடி குழந்தை களின் இல்லங்களைப் பார்வையிடுதல், பெற்ருேருடன் உள்ளங் கலந்து இன்னுரை யாடுதல் போன்றவற்ருலும், பெற்றேருடன் இணைந்து இயற் றும் செயல்கள் மூலமும் மாளுக்கர்கள்பற்றிய பல பிரச்சினைகளைத் தீர்த் துக் கொள்ளவேண்டும். பெற்றேர்கள் தம் சொந்தக் குழந்தையைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ளும் அறிவுடையவராக இருத்தல் வேண்டும். உடல் வளர்ச்சியில் தாம் காட்டும் அக்கறையைப் போல் உள்ள வள்ர்ச்சியிலும் தமக்குப் பங்கு உண்டு என்பதை ஒவ்வொரு பெற் ருேரும் உணர்தல் வேண்டும். உணர முடியாத பெற்றேர்களுடன் ஆசிரி யர்கள் உரையாடிக் கலந்து பேசி, அவர்கள் உணரும்படிச் செய்யலாம். மாளுக்கர்களின் வளர்ச்சியில் பள்ளியும் ஆசிரியரும் மேற்கொள் ளும் செயல்கள் அனைத்தையும் பெற்றேர்கள் நன்கு அறிதல் வேண்டும். பெற்ருேர்-ஆசிரியர் கூட்டங்கள், தனி உரையாடல்கள், அறிக்கை க.உ.25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/407&oldid=778385" இலிருந்து மீள்விக்கப்பட்டது