பக்கம்:கல்வி உளவியல்.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. மதிப்பீடும் சோதனையும் இழந்தைகள் பள்ளிகளிலும் பள்ளிக்கு வெளியிலும் கற்றவற்றை அளந்தறியப் பயன்படுத்தும் ஆய்வுகளைக் கல்வித்துறை ஆய்வுகள் என்று குறிப்பிடலாம். ஆசிரியர்கள் கற்பித்தலால் குழந்தைகள் அறிந்து கொண்டவற்றையும், வகுப்பறை, பள்ளி அனுபவங்களால் அறிந்து கொண்டவற்றையும், பள்ளிக்கு வெளியில் பெறும் அனுபவங்களால் அறிந்துகொண்டவற்றையும் தனித்தனியாகப் பிரித்து அறிவதும், ஒவ் வொரு வகையிலும் அறிந்துகொண்டது எவ்வளவு என்பதைக் கணக் கிட்டு அறிவதும் இயலாத காரியம். எனவே, எல்லாத் துறைகளிலும் கற்றவற்றை ஒரு சேரத்தான் அறிந்துகொள்ள இயலும். மாளுக்கன் எவற்றைக் கற்றிருக்கின்றன், எவ்வளவு நன்ருகக் கற்றிருக்கின்றன் என்று அறுதியிடுவதுதான் மதிப்பிடுதல்’ என்பது. சிறிது காலமாகக் கல்வியற்றி மேற்கொள்ளப்பெற்று வரும் ஆராய்ச்சிகளில் ஒன்று தேர்வுகளைப் பற்றிய ஆராய்ச்சியாகும். நீண்ட காலமாகப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பெறும் தேர்வுகளின் நோக்கங் களப்பற்றியும், அவை எந்த அளவு முற்றுப்பெற்றுள்ளன என்பதைப் பற்றியும் பல நாடுகளில் ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இவற்றின் பயனகப் பல புதிய ஆய்வுகளும் கருத்துக்களும் கிடைத்துள்ளன. தேர்வுகளின் நோக்கம் : பயிற்றலின் பயனை அளந்தறியப் பயன் படுபவை தேர்வுகள். எனவே, அவை தொன்றுதொட்டு நடைபெற்று வருகின்றன. வகுப்பு மாற்றம், பள்ளிக்கட்டணச் சலுகை, தொழிலகங் களுக்கும் அலுவலகங்களுக்கும் ஆட்களைப் பொறுக்கி எடுத்தல் ஆகிய வற்றிற்கு அவை மேற்கொள்ளப்பெறுவதை காம் அறிவோம். தேர்வு களின்றி மாணக்கர்களின் தேர்ச்சியை உத்தேசமாக அறுதியிடுவது i &;iijs | čár-tests. 2 u ãúSióğ68-evaluation. 8 தேர்வுகள்-exarminations.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/409&oldid=778389" இலிருந்து மீள்விக்கப்பட்டது