பக்கம்:கல்வி உளவியல்.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 கல்வி உளவியல் விரும்பத்தக்கதன்று. பல இடங்களில் மாணுக்கர்கள் பயிலுகின்றனர்; பல பள்ளிகளில் பயிலுகின்றனர். பல ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். ஆகவே, பொதுத் தேர்வுகள் இன்றியமையாதவை. தேர்வுகள் மாளுக்கர்களின் திறனையும் கற்றவற்றையும் மதிப்பிடுவ தற்கு ஏற்பட்ட கட்டுப்பாட்டுடன் அமைந்த உற்று நோக்கல்சி ஆகும். ஒரே கட்டுப்பாடான சூழ்நிலையில் எல்லோரையும் ஒரே காலத்தில் மதிப் பிடுவதற்குத் தேர்வுகள் துணை செய்கின்றன. பயில்வோருக்கும் தேர்வுகள் பயன்படுகின்றன. அவை மாளுக்கர் களை ஊன்றிப் படிக்கத் தூண்டித் திட்டமான அறிவைப் பெறச் செய்கின் றன. பள்ளி வாழ்க்கையிலும் புற வாழ்க்கையிலும் ஒருவித ஒழுங்கினை ஏற்படுத்தி விரும்பத்தக்க வகையில் போட்டி மனப்பான்மையை உண் டாக்குகின்றன. தேர்வுகளின் பயனகப் பயில்வோர் தம் அறிவின் குறை பாடுகளை அறியவும், பயிற்றுவோர் தம் பயிற்றலின் குறைநிறைகளை அறியவும் முடிகின்றது. எனவே, தேர்வுகள் பண்டுதொட்டு இன்றுவரை இன்றியமையாத தொல்லையாகவே இருந்து வருகின்றன. இன்று இருவித ஆய்வுகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. ஒன்று, கட்டுரை ஆய்வுகள். மற்ருென்று, புதிய முறை ஆய்வுகள். வாய் மொழி ஆய்வுகளும் சில சமயம் மேற்கொள்ளப்பெறுகின்றன. கட்டுரை ஆய்வுகள் கட்டுரை ஆய்வை நாம் நன்கு அறிவோம். இது பல்லாண்டுகளாக நடைமுறையில் இருந்து வருவது; மூன்று அல்லது இரண்டரை மணிக் கால அளவில் ஐந்து அல்லது ஆறு விளுக்களைக் கேட்டு ஒரு பாடம் முழு வதிலும் மாளுக்கனுக்கு இருக்க வேண்டிய ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்ருண்டு அறிவை அளந்தறிய முயல்கின்றது இந்த ஆய்வு. புது முறை ஆய்வுகள் செல்வாக்குப் பெற்ற பிறகு இதன் செல்வாக்கு குறையத்தொடங்கி யிருக்கின்றது. எனினும், இந்த ஆய்வை அடியோடு நீக்கவழியே இல்லை; கல்லூரி வகுப்புக்களில் இதுதான் இன்றும் ஆட்சி செலுத்தி வருகின்றது. பாலார்டு போன்ற கல்வி நிபுணர்கள் இவ்வாய்வு சரியான அளவு கருவியல்ல என்பதைப் பல்லாண்டுகட்கு முன்னரே மெய்ப்பித்துவிட்டனர்; இதிலுள்ள குறைகளையும் கிறைகளையும் 15ன்கு கட்டுப்பாட்டுடன் அமைந்த உற்று நோக்கல்-.ெ வாய்மொழி ஆய்வுகள்.oral tests, o sL@sor egüeųssir-essay type tests. 7 uired rf. G-Ballard.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/410&oldid=778393" இலிருந்து மீள்விக்கப்பட்டது