பக்கம்:கல்வி உளவியல்.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 கல்வி உளவியல் (Foot-rule) அவருடைய எடையை அறுதியிட இயலாது. அடிக்கோலும் தராசும் தகுதியாற்றல் பெற்றவைதாம். ஆனல், ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட செயலுக்குத்தான் தகுதியாற்றலுடையது. இங்ங்னமே, அறிதிறனைச் சோதிக்க கினைக்கும் ஆய்வு இயற்கையான அறிதிறனைச் சோதியாமல், பள்ளிகளில் பயின்றவற்றையோ, ஒரு குறிப்பிட்ட சூழ் கிலையில் கற்றவற்றையோ சோதித்தால் அது ஏற்புடைய ஆய்வாகாது. நடைமுறையிலுள்ள தேர்வுகளில் கணக்கறிவைச் சோதிக்க ஆயத்தம் செய்யப்பெற்ற விளுக்கள் உண்மையில் மொழியறிவைச் சோதிப்பவை யாக அமைந்துவிடுவதுண்டு. அவ்விளுக்களை எளிய நடையிலோ தாய் மொழியிலோ கூறிஞல் மாளுக்கன் சரியாக விடையிறுக்கின்ருன்; ஆளுல், பிறமொழியிலோ, கடுமையான மொழியிலோ அமைந்தால் மொழியின் கடுமையால் தவிக்கின்ருன். புதிய முறை ஆய்வுகளில் இக்குறை நீக்கப்பெற்று ஆய்வுகள் தகுதியாற்றலைப் பெறுகின்றன. நாம் கருதும் திறன், அல்லது பண்பினைத்தான் ஆய்வு சோதிக்க வேண்டும். முரண்படாமை நல்லாய்வின் மற்ருெரு சிறப்பியல்பு முரண் படாமை எனப்படுவது. எதை அளந்தறிய வேண்டுமோ அதை மிகவும் திறமையாக அளந்தறிவதை முரண்படாமை என்று வழங்குவர். அஃதாவது, ஒன்றைப் பல தடவை சோதித்தாலும், ஒரே விடை வருவதா கும். முரண்படாமையுடைய ஒரு குறிப்பிட்ட ஆய்வை ஒரே கூட்டத் தினரிடையில் இடையிட்டு இடையிட்டுப் பன்முறை பயன்படுத்திலுைம் ஒரேவிதமான முடிவுகளைத்தான் காணக்கூடும். நடைமுறையில் இது சரி வருவதில்லை. ஏனெனில், பல காரணங்களால் கற்றறிவு வளர்ந்து கொண்டே செல்லுகின்றது. ஆதலின், ஓர் ஆய்வை ஒரு குறிப்பிட்ட குழுவினரிடையில் கொடுத்து,கொடுத்த சின் னுட்களுக்குப் பின்னர் அதே ஆய்வை மீண்டும் அவர்களிடம் கொடுத்தால் கற்றறிவின் வளர்ச்சியின் பயணுக அவர்கள் முன்னரைவிட பின்னர் அதிகமான மதிப்பெண்பெறு வார்கள். எனவே, ஓர் ஆய்வின் முரண்படாமையைக் காண வேண்டு மாயின் அதை ஒரு குறிப்பிட்ட குழுவினருக்குக் கொடுக்க வேண்டும். இதேஆய்வு மீண்டும் கொடுக்கப்படும் என்று முன்னறிவிப்பு இன்றியும், இந்த ஆய்வினைப்பற்றிப் பேசவோ சிந்திக்கவோ வாய்ப்பு கொடாமலும் மீண்டும் ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு இதே ஆய்வினை வழங்கி இவ்விரண்டு ஆய்வுகளிலும் ஒவ்வொருவரும் அதிக வேற்றுமையின்றி மதிப்பெண்கள் பெற்றிருந்தால் ஆய்வு முரண் பாடின்மையுடையது எனக் கூறலாம்.

    • UpTorul -m soul - reliability.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/416&oldid=778404" இலிருந்து மீள்விக்கப்பட்டது