பக்கம்:கல்வி உளவியல்.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதிப்பீடும் சோதனையும் 395 மேற்கூறிய முறையால் மாளுக்கர்களின் அவ்வப்பொழுது மனநிலை வேற்றுமையிலுைம், ஆய்வுகள் தக்கமுறையில் ஆயத்தம் செய்யப் பெருமையிலுைம் ஏற்படக்கூடிய முரண்பாடுகளையும் மதிப்பிட முடியும். ஒரு முறை வகுப்பில் இலக்கணத் தேர்வு ஒன்று நடத்திய ஆசிரியர் வகுப்பில் மூவரே தேறியது கண்டு மூன்று நாட்கள் கழித்து அதேவினத் தாளைக் கொண்டு நடத்திய தேர்வில் வேருெரு மூவர் தேறக் காண்கின்ற காட்சியை எந்தப் பள்ளிக்கூடத்திலும் இன்று காணலாம். கணக்குத் தேர்வில் இந்த அனுபவத்தை அடிக்கடிக் காணலாம். இந்த ஆய்வுகள் முன்னுக்குப்பின் முரணான முடிவுகளைத் தருபவை. நேற்று அறிவாளி, இன்று முட்டாள் என்பது வியத்தகு முடிவன்றே? ஒரு நல்ல ஆய்வில் இம்முரண்படாமையைக் காணமுடியாது. கட்டுரைத் தேர்வுகளின் முடிவுகள் முரண்படுபவை; தடவைக்குத் தடவை மாறுபடும் இயல்புடை யவை. புதிய முறைத் தேர்வுகளின் முடிவுகள் ஓரளவு முரண்படாத் தன்மையைப் பெற்றுள்ளன. ஆளுல், முரண்பாடுடைமை வேருெரு காரணத்தாலும் ஏற்படலாம். அஃதாவது, மதிப்பிடுபவர்கள் ஒருவருக் கொருவர் விடைகளின் தரத்தைப்பற்றி வேறுபடுதலாகும். மற்றும், ஒருவரே சோதித்தாலும் ஒரே விடைக்கு அவர் பல்வேறு சமயங்களில் பல்வேறு மதிப்பெண்கள் அளிக்கின் ருர். இதை நீக்கும் வழியை அடுத்துக் காண்போம்: புறவயம் : ஒரு நல்லாய்வின் இன்ைெரு சிறப்பியல்பு அதன் புறவயம் ஆகும். ஓர் ஆய்வின் விடையேடுகளைப் பலர் மதிப்பிட்டாலும் மதிப்பெண்கள் மாருதிருக்குமாயின், அவ்வாய்வு புறவயமுடையவை என்று சொல்லலாம். அஃதாவது, ஆய்வைக் கையாளுவோர் கருத்து, மனநிலை ஒருதலைச் சார்பு முதலியவற்றிற்கேற்றவாறு மாருத முடிவுகளைத் தரக்கூடிய ஆய்வே புறவயத்தைக்கொண்ட ஆய்வாகும். இன்று பள்ளித் தேர்வுகளால் காணும் முடிவுகளின் ஒரு பெருங்குறை தன்வயமான' தீர்ப்பு ஆகும். புதிய முறை ஆய்வுகள் யாவும் ஓரளவு புறவயமுடை யவை என்று கொள்ளலாம். புறவயத்திற்கும் முரண்படாமைக்கும் தொடர்பு உண்டு. புறவயத்தின் அதிகரிப்புக்கேற்ப, முரண்பாடுடைமை குறைவடையும். கையாளுவதில் எளிமை : ஒரு நல்லாய்வின் பிறிதோர் இயல்பு அது எளிதில் கையாளக்கூடியதாக இருப்பது. அஃதாவது, ਾਂ வழங்கக்கூடியதாகவும், எளிதாகத் திருத்தக்கூடியதாகவும் இருத்தல் 17 upsuus-objectivity. ** gsrautors-subjective. ** **ures eğle sraflamı8-practicability.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/417&oldid=778406" இலிருந்து மீள்விக்கப்பட்டது