பக்கம்:கல்வி உளவியல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வி உளவியலின் இயல்பும் அளவும் 2} வளரும் மாளுக்கர்கள் நடத்தைக்கும், பள்ளித் தேர்ச்சிக்கும் வாழ்க்கை வெற்றிக்கும், பெற்ருேர் அறிவுக்கும், அவர்களின் மக்கள் அறிவுக்கும், பெற்றேர் உடற்பண்புகளுக்கும் அவர்களின் குழந்தைகளின் உடற்பண்புகளுக்கும் இவைபோன்ற பலவிவரங்களை எண்ணிக்கை முறையைக் கொண்டு காண்கின்ருேம். ஒன்றினைக் கொண்டு இதைத் தெளிவு படுத்துவோம். பள்ளியில் கற்பிக்கும் திறனுக்கும் வயது முதிர்ச்சிக்கும் உள்ள தொடர்பொற்றுமையைக் கண்டறிவதாக வைத்துக் கொள்வோம். சரியாகச் செய்ய வேண்டுமாயின், வயதைத்தவிர மற்றெல்லாக் கூறுகளி லும் சரிசமமான இருவரது கற்பிக்கும் திறனை நாம் ஒப்பிடவேண்டும். அஃதாவது, அவர்களது பயிற்சி, நுண்ணறிவு, பாடத்திட்டத்தின் கடினம், அவர்களுக்குள்ள கற்கும் விருப்பம் ஆகியவை யாவும் ஒன்ருக இருத்தல் வேண்டும். இவை யாவற்றையும் சரியாகக் கட்டுப்படுத்தினல், கற்பிக்கும் திறனில் நாம் காணும் வேற்றுமைகள்யாவும் வயது வேறுபாட்டின் பய னென்று கொள்வது சரியாகும். ஆனால், உண்மையில் இவ்வாறு முற்றி லும் சமமாகப் பொருந்திய இருதொகுதிகளைக் காணல் குதிரைக்கொம்பே. ஆயினும், புள்ளியியலைக் கையாளுவதால் ஆராய்ச்சியாளர் வயதைத் தவிர, மற்ற வேற்றுமைகளால் சோதனை விவரத்தில் உண்டாகும் மாறு தலைக் கணித்துச் சமன்படுத்த ஏதுவாகின்றது. இங்ங்னம் முற்றும் சம மாகாத தொகுதிகளைக் கவனித்துக் கற்பிக்கும் திறன் வயதால் எவ்வாறு பாதிக்கப் பெறுகின்றது என்பதைப்பற்றி நம்பக்கூடிய முடிவுகளை ஆய் வாளர்கள் அடைகின்றனர். ஏனைய அறிவுத்துறைகளோடு தொடர்பு உளவியலுக்கும் ஏனைய அறிவுத்துறைகளுக்குமுள்ள தொடர்பு அறிதற்பாலது. அதனை ஈண்டுக் காண்போம். உளவியலும் மெய்ப்பொருளியலும் : மெய்ப்பொருளியல்' என் பது மிக்க தொன் மையது; பண்டைய கிரேக்க, இந்தியக் காலங்களிலேயே தோன்றியது. மெய்ப்பொருளியல் உலகப் பொருள்களின் அடிப்படை யான உண்மையை அறிய விரும்புகின்றது; உலகமனைத்தையும்பற்றி யது. ஆல்ை, அறிவியல்கள் உலகின் ஒவ்வொரு பகுதியையும் துறை யையும் பற்றியே ஆராய்கின்றன. முதலில் உளவியல் மெய்ப்பொரு ளியலின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது; பல்கலைக் கழகங்களிலும் உளவியல் மெய்ப்பொருளியலின் ஒரு பகுதியாகவே இருந்து வளர்ச்சி யடைந்தது. 57 மெய்ப்பொருளியல்-philosophy.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/42&oldid=778411" இலிருந்து மீள்விக்கப்பட்டது