பக்கம்:கல்வி உளவியல்.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. ஆசான் & "ஆசான் எப்படியோ, அப்படியே பள்ளியும்’ என்பது ஒர் பழமொழி. கல்வித்துறையில் ஆராய்ச்சிகள் மிக மிக, இப் பழமொழியின் உண்மை யும் உறுதிப்பட்டுக்கொண்டே வருகின்றது. அழகான கட்டடங்கள். நவீன பாடப் புத்தகங்கள், தாராளமான ஆய்வக வசதிகள், அளவற்ற கற்பிக்கும் சாதனங்கள், பெரிய நூலகங்கள்-இவை யாவும் 怒@ பள்ளிக்கு வாய்த்திருப்பினும், அது சிறந்த பள்ளியென்று சொல்வதற் கில்லை. ஆளைக் கண்டு மயங்காதே, ஊது காமாலை” என்று சொல் வதுபோல, அவை யாவும் புறத்தோற்றமே, வெறும் வெளிப்பகட்டே. இவற்றின் உள்ளே உயிர்காடிபோல் இருப்பவர்கள் ஆசிரியர்களே. நல்ல ஆளுமைப் பண்புகள் பெற்ற உற்சாகமுள்ள ஆசிரியர்கள் அங்கு இல்லாவிடில், அனைத்தும் வினே; அவை விழலுக்கிறைத்த நீராகவே முடியும். கல்வி உளவியல் என்பது ஆசிரியரைப்பற்றியும், மாளுக்கர்களைப் பற்றியதுமான ஒரு துறை. தொடர்ந்த்ாற்போல் மானக்கர்களைப்பற்றிச் சரியாக அறிந்து கொள்வதோடு தன்னுடைய அறிவையும் வளர்க்கும் முறைகளையும் மிகக் கவனத்துடன் திறய்ைந்து அறிவதில்தான் ஆசிரியத் தொழிலின் வளர்ச்சி அடங்கியிருக்கின்றது. ஆசிரியரின் பயிற்றும் முறைகளை மாற்றம் செய்யவேண்டும் என்ற தன்னுடைய விருப்பம், குழவிகளுடன் பணியாற்றும் பொழுது தான் கொள்ளும் உறவு முறைகள், தன்னுடைய பிற திறன்கள்-ஆகியவற்றில் எல்லாம் ஆசிரியத் தொழில் வளர்ச்சியின் உயிர்காடி பேசும்; பிரதி பலிக்கும். மாளுக்கர்களின் தனித்தனி நடத்தையும், அவர்கள் ஆசிரியருடனும் தம்மொடு தாமும் இடைவினை இயற்றுவதும் அவர்கட்கு வாய்த்துள்ள ஆசிரியரையே பெரும்பாலும் பொறுத்தவை. பட்டப் படிப்புடனே அறிவு வளர்ச்சியும் முடிவு பெற்ற ஆசிரியரும், ஒரே மாதிரியான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/421&oldid=778416" இலிருந்து மீள்விக்கப்பட்டது