பக்கம்:கல்வி உளவியல்.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 கல்வி உளவியல் ஏங்க வேண்டியிருக்கின்றது. இவை மட்டிலுமல்ல; மேலும் பல முரண் பாடுகள் இருக்கின்றன. பொதுவாகக் கூறினல், நம்முடைய உட் துடிப்புக்களும் இயல்பூக் கங்களும் நம்மை இங்குமங்கும் இழுக்கின்றன. ஆனால், நம்முடைய பண்பாடு, பழக்க வழக்கம், வழக்காறு போன்றவை பல கட்டுப்பாடுகளை உண்டாக்கியுள்ளன. மனநலத்தைப் பாதிக்கக்கூடிய இம்முரண்பாடு களைப் பலர் மறந்துவிடலாம். ஆசிரியரோ, இத்தடைகளைக் கவனியா மல் இருக்கமுடியாது. கல்வி கேள்விகளில் சிறந்தவரென சமூகத் தாரால் கருதப்பெரும் ஆசிரியர் இம் முரண்பாடுகளே உணர்ந்து அவற்றை ஏற்றவாறு குறைக்க முயல வேண்டும்; தகுந்த முன்மாதிரி யாகவும் நடந்துகொள்ள வேண்டும். இது முதிர்ந்தோரான ஆசிரியரின் பெரும் பொறுப்பாகும். சமூகமும் அரசின்ரும் ஆசிரியரின் தேவைகளை உள்ளபடி உணர்ந்து அவருடைய ஊதியம், கிலே முதலியவற்றை உயர்த்தவேண்டும். பள்ளியில் அவருக்கு வேண்டிய எல்லா வசதிகளை யும் செய்து தருதல் வேண்டும். அண்மைக்காலத்தில் இத்துறைகளில் பெருமுயற்சிகள் மேற்கொள்ளப்பெற்று வருகின்றன. மேற்கூறிய பல முரண்பாடுகளை ஒழிப்பதில் ஆசிரியர் சமூகத்திற்கும் மாளுக்கர்கட்கும் வழிகாட்டியாக இருத்தல் வேண்டும். காலத்திற்கு ஒவ்வாத பழக்கங் களைப் போக்கவேண்டும்; புதியவற்றில் இன்றியமையாதனவற்றைத் தழுவுதல் வேண்டும். பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல; கால வகையி ளுனே." என்ற நூற்பாவின் உண்மை ஆசிரியத் தொழிலுக்கும் பொருந்தும். இங் நிலையை மேற்கொண்டால்தான் ஆசிரியர் சமூகத்தோடு கன் முறையில் ப்ொருத்தப்பாடு பெறுதல் முடியும்; அவருடைய பொருத்தப்பாட்டால் பிறர்க்கும் நன்மை பயக்கும். ஆசிரியர்-ஒரு தொழில்முறையின் உறுப்பினர் ஆசிரியத் தொழிலின் உறுப்பினரைப்பற்றி ஆராயப் போவதற்கு முன் ஒன்றை நினைவில் வைக்கவேண்டும். திருமணம் முடியும்வரை அல்லது வேறு தொழில் கிடைக்கும்வரை இத்தொழிலில் இறங்கும் ஆசிரியைகளையும், குழந்தைகளிடம் உண்மையான ஆர்வமும் அன்பும் இல்லாது இத்தொழிலை மேற்கொண்டவர்களையும், குறைந்த உழைப்பு, 5 கன்னுரல்-சூத். 462.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/424&oldid=778420" இலிருந்து மீள்விக்கப்பட்டது