பக்கம்:கல்வி உளவியல்.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசான் 403 கிறைந்த விடுமுறை இதில் உள்ளன என்று கருதி இத்துறையில் புகுந்துவிட்டவர்களையும், எந்த வேலையும் கிடைக்காததால் இத் தொழி லுக்கு வந்தவர்களையும்பற்றி ஈண்டு ஆராயப் போவதில்லை. ஆசிரியத் தொழில் ஓர் அருட்பணி என்று உண்மையாகவே எண்ணி இதில் புகுந்து பணியாற்றும் கல்லாசிரியர்களை மட்டிலுமே ஈண்டு கவனிப்போம். நல்லாசிரியர்கள் : கல்லாசிரியரின் இயல்பை நன்னூல், குலனருள் தெய்வம் கொள்கை மேன்மை கலையில் தெளிவு கட்டுரை வன்மை கிலம்மலை நிறைகோல் மலர்கிகர் மாட்சியும் உலகியல் அறிவோடு உயர்குணம் இணையவும் அமைபவன் நூலுரை யாசிரி யன்னே.” என்று குறிப்பிடுகின்றது. கல்லாசிரியரை கிலம், மலை, துலாக்கோல், மலர் ஆகியவற்றுடன் ஒப்பிட்ட காரணத்தையும் விளக்குகின்ருர் ஆசிரியர். அன்றியும், அந்நூலில் ஆசிரியத் தொழிலுக்கு அருகதை யற்றவர்கள் யாவர் என்பதும் குறிப்பிடப்பெற்றிருக்கின்றது. மொழிகுணம் இன்மையும் இழிகுண இயல்பும் அழுக்கா றவாவஞ்சம் அச்சம் ஆடலும் கழற்குடம் மடற்பனை பருத்திக் குண்டிகை முடத்தெங் கொப்பென முரண்கொள் சிந்தையும் உடையோர் இலர்ஆ சிரியர்ஆ குதலே." ஆசிரியத் தொழிலுக்கு அருகதையற்றவர்களைக் கழற்குடம், மடற்பனை, பருத்திக் குண்டிகை, முடத்தெங்கு ஆகியவற்றுடன் ஒப்புமைப்படுத் திக் காட்டுகின்ருர். அவ்வாறு ஒப்புமைப்படுத்தியதன் காரணத்தையும் விளக்குகின்ருர் ஆசிரியர்." கற்பிக்கும் முறைகளை நுவலும் மேனுட்டு நூல்களும் நல்லாசிரியரின் தன்மைகளை எடுத்து இயம்புகின்றன. ஆசிரியர் பெற்றுள்ள பொருள் அறிவு வேறு; அப்பொருளறி வினைக் கவர்ச்சியுடன் மாளுக்கர்கட்கு எடுத்துரைக்கும் திறன் வேறு. இதற்கு அவர் உளவியல் அறிவு நன்கு பெற்றிருக்க வேண்டும். தகுந்த எடுத்துக்காட்டுக்களுடனும் குழந்தைகளின் அனுபவத்துடனும் தொடர்புபடுத்திக் கற்பிப்பது ஒரு தனித்திறனுகும். தெளிவாக உரைக் கும் ஆசிரியர்களையே குழந்தைகள் மிகவும் விரும்புவர்; உயிரற்ற முறையில் பயிற்றுவதைச் சிறுவர்கள் விரும்பார். கற்பித்தலே ஒரு 5 சூத்திரம்-26. 7 சூத்திரங்கள்-27, 28, 29. 30, குத்திரம் 31. 9 சூத்திரங்கள்-32, 33, 34,35,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/425&oldid=778422" இலிருந்து மீள்விக்கப்பட்டது