பக்கம்:கல்வி உளவியல்.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 கல்வி உளவியல் பொழுதுபோக்காக மேற்கொள்பவர்களும் உண்டு; பாடங்களைப் பசு மரத்தானிபோல் பதிய வைப்பவர்களும் உண்டு. ஆசிரியர்கள் சிறுவர் களிடம் அக்கறை காட்டி அவர்களுக்குத் துணைபுரியும் ஆயத்தமுடைய வராக இருத்தல் வேண்டும். கூலிக்கு மாரடிப்பவர்களாகத் தோன்ற லாகாது. குழந்தைகளுடனிருந்து குழந்தைகட்காகவே வாழ்கின்ருேம் என்ற எண்ணம் தலையாயது. இவ்விடத்தில் ஆசிரியர்கள் ஒன்றினை நினைவில் இருத்தல் வேண்டும். இன்றைய நிலையில் தம்முடைய பணிக்காகப் ப்டி அளப்போர் வேறு; பணியின் பயனைப் பெறுவோர் வேறு. நிர்வாகம் ஊதியம் வழங்குகின்றது. சிறுவர்கள் படிக்க வருகின்றனர். ஊதியம் போதாது என்று கேட்கும் பிரச்சினையையும் குழந்தைகட்குப் பயிற்றும் பிரச்சினையையும் ஒன்று சேர்த்துக் குட்டையைக் குழப்பக்கூடாது. ஊதியத்தை எண்ணி குழந்தைகட்குச் செய்யும் தெய்வப் பணியில் குறையிருக்குமாறு செய்யலாகாது. ஆசிரியருக்கு நல்ல தோற்றம் வேண்டும். கவர்ச்சியான தோற்றம், தூய்மை, தோழமைத் தன்மை, நகைச்சுவை, பொறுமை, மரியாதை, நேர்மை, பாரபட்சமின்மை முதலிய பண்புகள் ஆசிரியருக்கு மிகவும் வேண்டற்பாலவை. பாலர்களின் கவர்ச்சிகளுக் கேற்பவும், அவர் களுடைய பல்வேறு திறன்களுக்கேற்பவும் கற்பிக்கும் முறைகளை மேற் கொண்டு கற்பிக்க வேண்டும். வகுப்பில் தலைமயிர் ஆற்றுதல், மேசையின்மேல் கால்களைப் போடு தல், அடிக்கடி முக்குக் கண்ணுடியைக் கழற்றுதல், துடைத்தல், போடுதல், வகுப்பில் மூக்குப்பொடி போடுத்ல், சொந்த வரலாற்றை அடிக்கடிப் பேசுதல், கீச்சுக்குரல், மாருத குரல், கூச்சல் போடுதல், அடிக்கடிக் கனைத்தல், தலையைச் சொரிதல் போன்ற சில தவருன பழக்கங்கள் சிறந்த பயிற்றலுக்கு இடர்ப்பாடுகள் ஆகும். இவற்றை ஆசிரியர்கள் அறவே நீக்கவேண்டும். கற்றல் ஆசிரியருக்கும் வேண்டும்: ஆசிரியரும் தன் தொழிலில் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருத்தல் வேண்டும். பட்டக் கல்வி அல்லது பொதுக் கல்வி முடிவுற்ற பிறகுதான் கற்றல் தொடங்கு கின்றது என்றும், பயிற்சி முடிந்து பட்டமோ சான்றிதழோ பெற்ற பிறகு தான் கற்பித்தல் தொடங்குகின்றது என்றும் இன்றைய ஆசிரியர் அறிய வேண்டியது மிகவும் இன்றியமையாதது. 'அறிதோறும் அறியாமை கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/426&oldid=778424" இலிருந்து மீள்விக்கப்பட்டது