பக்கம்:கல்வி உளவியல்.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசான் 405 டற்றல்” என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கினை அவர்கள் எண்ணி ஒர்தல் வேண்டும். நவீன வாழ்க்கையில் அறிவின் எல்லே எல்லாத் துறைகளிலும் விரிந்து கொண்டே இருக்கின்றது. தவிர, காம் கல்லூரிகளில் பயிலும் பொழுது ஒவ்வொரு துறையிலுமுள்ள அறிவு நுட்பங்களை யெல்லாம் புரிந்து கொண்டுவிட்டோம் என்றும் சொல்லுவதற்கில்லை. "ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும் காற்கூறு அல்லது பற்றலன் ஆகும்.' என்ற நன்னூல் சூத்திரப்படி ஆசிரியர் கற்பித்த பொருளை நிறையக் கற்கினும் அவருடைய புலமைத் திறத்தில் காற்பங்குகூட நம்மிடம் ஏற் :படாது. 'அவ்வினை யாளரோடு பயில்வகை ஒருகால் செவ்விதின் உரைப்ப அவ்விரு காலும் மையறு புலமை மாண்புடைத் தாகும்.”* என்ற சூத்திரப்படி உடன் பயிலும் மாளுக்கர்களுடன் கலந்து ஆராயும் பொழுது இன்னெரு கால் பங்கும், தான் படித்தவற்றைப் பிறர் உணர விரித்துரைக்கும்பொழுது எஞ்சியுள்ள இரண்டு காற்பங்குகளும் நம்மிடம் படிகின்றன. எனவே, தொடர்ந்து கற்றுக்கொண்டே யிருந்தால்தான் அறிவும் கிரந்தரமாக நிலைகிற்பதோடன்றி அது பெருகவும் செய்யும்; பல நுட்பங்களை அறியவும் வாய்ப்புக் கிடைக்கும். இவ்விடத்தில் கன்னுலா சிரியர் கூறும், "முக்காற் கேட்பின் முறையறிந்து உரைக்கும்" என்ற சூத்திரமும் நினைவுகூர்தற்பாலது. மூன்று முறை நன்கு பாடங் கேட்டால்தான் ஆசிரியர் கற்பித்தவற்றைப் பிறருக்கு எடுத்து உரைத்தல் இயலும். ஆனால், இன்று பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாடங்கள் விரைந்து போகின்றன; எல்லாம் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த மாதிரிதான். இங்கிலையில் ஆசிரியர் மேலும் கற்றல் -தொடர்ந்து கற்றுக்கொண்டே இருத்தல்-இன்றியமையாதல்லவா? ஆசிரியர் கற்றவண்ணமிருக்க வேண்டும் என்பதற்கு வேறு பல காரணங்களும் உள்ளன. முதலாவதாக, கற்றலில் தேங்கி நிற்றல் மகிழ்வற்ற தன்மையையும் எரிச்சலையுமே விளைவிக்கும். மேலும், ஒரே பாடங்களையும் பயிற்சிகளையும் திரும்பத் திரும்ப உரைத்து வருவதால் 10 சூத்திரம்-44, 21 சூத்திரம்.45, 12 சூத்திரம்-43.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/427&oldid=778426" இலிருந்து மீள்விக்கப்பட்டது