பக்கம்:கல்வி உளவியல்.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசான் 407 கள்," தொழிற்சாலை முறை ஆராய்ச்சிகள், சொற்பொழிவுகள் ஆகியவற்றில் பங்கு பெறுதல் வேண்டும். ஆசிரியரின் தன்-மதிப்பீடு 1: ஆசிரியரின் துலக்கமும் அவர் செய்யும் பணியின் மேம்பாடும் மாற்றங்களைக் கொண்டவை. ஆனல், மாற்றங்கள் யாவும் மேம்பாட்டைக் குறிக்கின்றன என்றும் சொல்லு வதற்கில்லை. எனவே, ஆசிரியர் தான் செய்யும் பணியிலுள்ள குறை களைத் தொடர்ந்து அறிதலும், தான் ஒரு குறிப்பிட்ட முறையில் பணியை ஆற்றுவதன் காரணத்தையும், அம்முறை எவ்வாறு வெற்றிக் குக் கொண்டு செலுத்துகின்றது என்பதையும் ஆராய வேண்டுவது மிகவும் இன்றியமையாதது. தான் செய்யும் வேலையை ஆசிரியர் மூன்று துறைகளில் ஆராயலாம்: (i) ஏட்டுப் படிப்புத் திறனில் காணப்பெறும் தனியாள் வேற்றுமை களுக்குத் தான் செய்திருக்கும் ஏற்பாடுகள்: (ii) தொழில் முறையில் தான் என்னென்ன விதங்களில் பங்கு பெற்றிருத்தல் என்பதுபற்றிய சிந்தனை, (iii) சிறுவர்கள் சமூக வளர்ச்சியில் முன்னேற்றம் அடை வதற்குத் தன்னல் மேற்கொள்ளப் பெற்ற வழிவகைகள். ஒவ்வொரு துறையிலும் பல சிறிய விளுக்களை எழுப்பிக்கொண்டு ஆராய்தலால் உண்மைநிலை எது எனக் காணலாம். தான் வகுப்பில் செய்வதற்கெல் லாம் பதிவேடுகள் வைத்திருந்தால், அவை ஓர் ஆசிரியரின் கிறைகளை யும் குறைகளையும் எளிதில் அறிந்து கொள்ளும் மூலங்களாகப் பயன் படும். வகுப்பறைச் செயல்களில் மேம்பாடு : மேற்கூறியவாறு குறை களே யறிந்த ஆசிரியர் அக்குறைகளைக்களைவது எப்படி? இதற்கு ஒரு திட்டமுறை யொன்றும் இல்லை. அ.து ஆசிரியர் இதுகாறும் மேற் கொண்ட முறைகள், தான் மேற்கொண்டதன் மதிப்பீட்டுவகை, எத் துறைகளில் மேம்பாடு தேவை, அல்லது இயலும் என்பதை ஆசிரியர் அறிவது ஆகியவற்றைப் பொறுத்தது. ஆசிரியர் மேற்கொள்ளக்கூடிய ஒரு சில மாற்றங்களை ஈண்டு ஆராய்வோம். சோதனை செய்தல்: குறைகளை ஒருவாறு அறிந்த ஆசிரியர், தான் மேற்கொள்ளும் புதிய முறையைச் சோதனை செய்து பார்க்க வேண்டும். மிகவும் கவனமாக மேற்கொள்ளப்பெறும் இச் சோதனையில் is &q5ägrigi-seminar. ** தொழிற்சாலை முறை ஆராய்ச்சிகள்.work shops. 17 géâr-ıoğlü5G-self appraisal. is apsuffissis-sources. 1 * Gg mg&or Gæigsb-experimentation. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/429&oldid=778430" இலிருந்து மீள்விக்கப்பட்டது