பக்கம்:கல்வி உளவியல்.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசான் 41 #. கொள்ளலாம். நம் பள்ளியின் கல்வி ஏற்பாட்டை எங்ங்ணம் மேம்பாடுறச் செய்வது ? தனியாள் வேற்றுமைகளை மிகத் திறமையாகச் சமாளிக்கும் வழிவகைகள் யாவை? ஒழுங்கு முறைபற்றிப் பள்ளியில் எழும் பிரச் சினைகளுக்கு அடிப்படைக் காரணங்கள் யாவை? அவற்றை எப்படிச் கண்டு எங்ங்ணம் நீக்குவது ? மதிப் பெண்கள் வழங்கும் முறைகளையும் அறிக்கைகளைத் தயாரிக்கும் முறைகளையும் எங்ங்னம் சிறப்பாக அமைப் பது ?-என்பன போன்றவை இவண் ஆராயப் பெறும் பிரச்சினைகளுக்கு எடுத்துக் காட்டுக்களாகும். வட்டம், அல்லது மாவட்டங்களிலுள்ள பல பள்ளிகள் ஒன்று கூடியும் இப் பிரச்சினைகளை ஆராயலாம். அப் பொழுது ஆசிரியர்கள் பல சிறிய குழுக்களாகப் பிரிந்து பிரச்சினைகளைத் திட்டவட்டமாக ஆராய்ந்து முடிவுகாண வேண்டும். ஒவ்வொரு குழுவும் கண்ட முடிவுகளைப் பொது மேடையில் வெளியிடுதல் வேண்டும். இம் முறையில் தக்க பயிற்சியும் வாய்ப்பும் இல்லாத காரணத்தால் பெரும் பான்மையான ஆசிரியர்கள் தனித்தனி முறையில் பங்கு கொள்ளாது அனைத்தையும் குழுத் தலைவரின் முடிவிற்கே விட்டுவிடுவதுண்டு. இன் னும் சிலர் தனியாகவே எண்ணி எண்ணி வளர்ந்தவர்களாதலின், அவர் களும் குழு நடவடிக்கைகளுக்கு இடையூருக இருப்பர் தம்முடைய முடிவுகளையே வற்புறுத்தவும் செய்வர். இவை நிகழாமல் விழிப்பாக இருத்தல் வேண்டும். - தொழிலிலிருந்து கொண்டே பெறும் பயிற்சியில்: ஆசிரியர்கள் சரி யாகப் பயிற்சி பெறுகின் ருர்களா என்பதையறிய இவ்விளுக்கள் பெருங் துணைபுரியும். ஆசிரியர்கள் நட்பு முறையில் தொழில் நோக்கங்கள், திட்டங்கள், முறைகள்பற்றிய ஆக்க முறை திறய்ைவுகளைப் பரிமாறிக் கொள்கின்றனரா ? ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் ஒவ்வொரு ஆசிரியரும் பிற ஆசிரியர்களுடன் கலந்து துணை பெறுவதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குகின்றனரா? ஆசிரியர்கள் பிற ஆசிரியர்களால் கற்ப தற்குத் துணை செய்வது மாளுக்கர்கட்கு மட்டிலும் கற்பிப்பதைவிட மிக வும் சிக்கனமான கற்பித்தல் என்பதை உணர்கின்றனரா? குழு வேலையும் துறைபற்றிய கூட்டங்களும் ஆசிரியர்கள் கூடுவதற்கும், அங்கு தொழில் பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் வாய்ப்புக்களைத் தரு கின்றன. முறையணையா84 அடிப்படையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வது தொழில் துறைத் தூண்டலுக்குப் பயன்தரக் கூடிய மூலமாக அமைகின்றது. தவிர்க்க முடியாத முறையில் எழும் எண்ணற்ற 28தொழிலிலிருந்துகொண்டே பெறும் பயிற்சி -in-Service training. * 4 ipsmpuă truir - informal.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/433&oldid=778439" இலிருந்து மீள்விக்கப்பட்டது