பக்கம்:கல்வி உளவியல்.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 கல்வி உளவியல் பிரச்சினைகளுக்கேற்றவாறு புதிதாகப் பணியாற்றவரும் ஆசிரியர்களைப் பொருத்தப் பாடடைவதற்குத் துணை புரிவது ஒரு பெருந் தொண்டாகும்; இது ஆசிரியத் துறைக்குப் புதியவராக இருப்பவருக்குத் துணையாக இருப்பதுடன், அனுபவம் மிக்க ஆசிரியருக்கும் புதிய கோக்கங்களைத் தருகின்றது. (ii) கருத்தரங்குகளும்" தொழிற்சாலைமுறை ஆராய்ச்சிகளும்: இவை பல பள்ளிகளின் ஆசிரியர்கள் அடிக்கடி ஒருங்கு கூடி தங்கள் தொழிலில் எழும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வாய்ப்பளிக்கின்றன. இம் முறைகளில் அமைக்கப்பெறும் ஆசிரியர்களின் மாநாடு ஒர் உண்மை யின் அடிப்படையில்தான் கூட்டப் பெறுகின்றது. திறனயும் சிந்தனை, கலந்தாய்தல், எதிர்காலச் செயல்களைப்பற்றி ஒழுங்கான திட்டம் வகுத்தல் ஆகியவற்றை ஊக்கும் சூழ்நிலையில் ஆசிரியர்கள் சிறந்த முறையில் கற்கின்றனர் என்பதுதான் அவ்வுண்மை. ஒவ்வொரு பாட ஆசிரியர்களும் தத்தம் பாடம்பற்றிய பிரச்சினைகளையும் அவற்றின் விளக்கத்தினையும் அறிவதுடன், ஒழுங்கு முறைபற்றிய பொதுவான பிரச்சினைகளை எல்லாப் பாடஆசிரியர்களும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளுகின்றனர். இந்த முறைகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மக்களாட்சி முறையில் நடைபெறுவதால், எல்லோரும் நல்ல முறையில் பங்கு பெற்று நல்ல முறையில் கருத்துக்களை அறிந்து கொள்ளு கின்றனர். மேற்கூறிய இரண்டு முறைகளிலும் கூட்டுறவை வளர்ப்பதற்குத் தற்சமயம் சில பயிற்சிக் கல்லூரிகளின் அங்கமாக அமைந்து பணியாற் றும் விரிவுப் பணித்துறை பேருதவி புரிந்து வருகின்றது என்பதை அதில் பங்குபெறும் ஆசிரியர்கள் நன்கு அறிவர். (iii) ஆசிரியர்க் கழகங்கள் : ஆசிரியத் தொழிலில் அன்ருடம் எழும் பல பிரச்சினைகளே இக் கழகங்களில் ஆராயலாம். பயிற்றல் முறை களைப் பற்றி ஆராய்ச்சி செய்து அவ்வாராய்ச்சிகளை சொற்பொழிவுகள் மூலமும் சொற்போர்கள் மூலமும் பரவச் செய்யலாம். ஆராய்ச்சி மனப் பான்மை வளர இக் கழகங்கள் பெருந்துணைபுரியும் ; பல புதிய கருத்துக் களைச் சோதிக்கவும் இங்கு இடம் உண்டு. பெரும்பாலான ஆசிரியர்கள் பயிற்சிப் பள்ளி, கல்லூரிகளை விட்ட பிறகு ஆசிரியத் தொழில்பற்றிய எந்த நூல்களையும் படிப்பதே இல்லை : 2 கருத்தரங்கு - seminar. 28தொழிற்சாலை முறை ஆராய்ச்சி - workshops.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/434&oldid=778441" இலிருந்து மீள்விக்கப்பட்டது