பக்கம்:கல்வி உளவியல்.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசான் 413 படிக்கும் ஆர்வமும் அவர்களிடம் இருப்பதில்லை. சிலர் அவை வெறும் ஏட்டுச் சுரைக்காய்கள் என்று தவருகவும் எண்ணுகின்றனர். தம்மைப் போலவே இடைவிடாது ஊக்கத்துடன் பிற இடங்களில் பணியாற்றும் ஆசிரியர்களினுடையவும் கல்வி நிபுணர்களினுடையவும் உளவியல் அறிஞர்களினுடையவுமான அனுபவங்களே நூல்வடிவம் பெற்றுள்ளன என்பதைச் சிந்தித்து ஒர்வார்களாயின், அவர்களிடம் இத் தவருன கருத்து இடம் பெருது. இன்று ஆசிரியத் தொழில்பற்றிய வெளியீடு கள் ஏராளமாக உள்ளன. ஒவ்வொரு ஆசிரியருக்கும் அன்ருட வேலை யில் குறுக்கிடும் பல பிரச்சினைகளை நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் தம் அனுபவத்தில் கண்டு அவற்றிற்குத் தீர்வுகளும் கண்டிருப்பதை இத் தகைய வெளியீடுகளைப் படிப்பதல்ை அறிந்து கொள்ளலாம். பெரும்பாலான ஆசிரியர்கள் வகுப்பறைப் பிரச்சினைகளைப்பற்றிச் சிந்திப்பதே இல்லை ; சிலருக்கு அத்தகைய பிரச்சினைகள் இருப்ப தாகத் தோன்றுவதுமில்லை. அதற்குக் காரணம், அவர்கள் தாம் மேற் கொள்ளும் கற்பிக்கும் முறைகளைத் திறனயும் முறையில் பாகுபாடு செய்து கையாளாமையே. பல கருத்தரங்குகளிலும் தொழிற்சாலை ஆராய்ச்சி முறைகளிலும் பல ஆசிரியர்களுடன் கலந்து பழகும் வாய்ப் புள்ளவர்கள் பெருபான்மையோரிடம் காணப்பெறும் எடுப்பான இக் குறைகளைக் கட்டாயம் காணச் செய்வார்கள். அருட்பணிபுரியும் ஒரு தொழிற் குழுவினரிடம் இத்தகைய குறைபாடு இருப்பது மிகவும் வருந்தத் தக்கது. இத்தகைய குறை ஆசிரியர்களிடம் காணப்பெறுவதற்கு ஒரு மூக்கிய காரணம் உண்டு. ஆசிரியுப் பள்ளிகளில் பயிற்சி பெறுங்கால், பயிற்சித் திட்டம் பெரும்பாலும் பொருளறிவு பெறுவதாகவே அமைந் துள்ளது ; கற்பித்தல் துறையில் அவசியம் குறுக்கிடும் பல பிரச்சினை களில் முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுப்பதிலும், அவற்றை ஆராய்வதி லும் உள்ள திறன்களை வளர்ப்பதில் அது அதிகக் கவனம் செலுத்து வதற்குத் திட்டத்தில் அதிக இடம் இல்லை; அப்படி இருப்பினும் பயிற்சிப் பள்ளிகள் அவற்றிற்கு வாய்ப்புக்கள் தருவதில்லை. பயிற்சிக் கல்லூரி களிலும் கூட இத் திறன்களை வளர்க்கும் முறை மனநிறைவு கொள்ளத் தக்கதாக இல்லை. ஆசிரியர்-நிர்வாகத்தினர் தொடர்பை மேம்பாடடையச் செய்தல்: பெரும்பாலான பள்ளிகளில் அடக்கு முறை கிர்வாகமே நிலவு கின்றது. பள்ளிகளில் தொன்றுதொட்டு மேற்கொள்ளப் பெற்றுவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/435&oldid=778443" இலிருந்து மீள்விக்கப்பட்டது