பக்கம்:கல்வி உளவியல்.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 கல்வி உளவியல் பழைய முறைகளைக் கைவிட்டுப் புதிய முறைகளை வெறுக்கும் சர்வாதி காரப் போக்குள்ள பல பள்ளித் தலைமையாசிரியர்களையும் பள்ளித் தணிக் கையாளர்களையும் இன்னும் நாம் காணுமல் இல்லை. தொடக்கநிலைப் பள்ளி ஆசிரியர்க் கூட்டங்களிலும், பள்ளிகளில் நடைபெறும் ஆசிரியர்க் கூட்டங்களிலும் முறையே பள்ளித் தணிக்கையாளரும் தலைமையாசிரி யரும் ஆசிரியர்களின் விடுதலை யுணர்வுடன் பேசும் பேச்சுக்குப்பதிலாகத் தம் கருத்திற்குத் தாளம் போடுவதையும் ஒத்து ஊதுவதையுமே விரும்பு கின்றனர். சில கடினமான பிரச்சினைகளைத் தாம் எடுத்துக் கூறினல் தவருண எண்ணம் ஏற்படக்கூடும் என்று அஞ்சியே பலர் அங்ங்ணம். எடுத்துக்கூருது அமைகின்றனர். இத்தகைய தவறன நிர்வாகப் போக்கால் ஆசிரியரின் கற்பனைத்திறன் கெடுகின்றது; விடுதலையுணர்ச்சி சீரழிகின் றது; தன்-மதிப்பும் தளர்ந்து போய்விடுகின்றது. புதிய கல்வி முறை களில் பயின்ற இளம் ஆசிரியர்கள் இச் சூழ்நிலையில் பொருத்தப்பாடடை வது இயலாததாகின்றது. வறுமைப் பிணியால் ஏற்படும் வாழ்க்கையைப் பற்றிய அச்சத்தால், அவர்கள் கிர்வாகத்தின் கருத்துக்கிசையப் பொருத்தப் பாடடைந்து விடுகின்றனர்! சுறுசுறுப்பான பங்கு தேவை : பள்ளி மேம்பாட்டினிமித்தம் ஆசிரியர் நிர்வாகத்துடன் தொழில் துறைத் தொடர்பு கொள்ள விழைந் தால், பள்ளி நடைமுறையில் அவர் சுறுசுறுப்பான பங்கினைப் பெறுதல் வேண்டும்; இதல்ை ஆசிரியர் தலைமையாசிரியருடனே, பள்ளித் தணிக்கையாளருடனே நன்முறையில் வேலை மூலம் தொடர்பு கொள்ளு தல் இயலும். இத்தகைய கூட்டுறவால் இரு சாராரிடையேயும் பரஸ்பரத் தன்-மதிப்பு வளர்கின்றது என்பது சமூக உளவியல் காட்டும் உண்மை. இதல்ை பெரும்பாலும் கிர்வாகத்துடனும் ஆசிரியர் ஒத்துழைக்க இயலும் என்பதைப் பலர் உணரமுடிகின்றது. தலைமையாசிரியர் (அல்லது பள்ளித் தணிக்கையாளர்) ஆசிரியர் உண்மையில் ஓர் உழைப்பாளி என்பதையும், அவர் சிலசமயம் தவறு இழைப்பினும் பள்ளி நலன் பொருட்டு உழைப் பதில் உண்மையிலேயே விருப்பம் கொண்டுள்ளார் என்பதையும் நன்கு உணர முடிகின்றது. ஒருவர் நோக்கத்தை மற்ருெருவர் அறிகின்ற வாய்ப் பிளுல் இருவரிடையேயும் சகிப்புத்தன்மை வளர்கின்றது. இதல்ை பல புதிய முறைகளைக் கையாளுவதற்கும் பழைய முறைகளை மாற்றியமைப் பதற்கும் வசதியேற்படுகின்றது. எதனையும் சிந்தனையின்றி மேற்கொள் ளும் மனப்பான்மை இருவரிடையேயும் அடியோடு மறைகின்றது. 275 opé, a grssluić - Social psychology.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/436&oldid=778445" இலிருந்து மீள்விக்கப்பட்டது