பக்கம்:கல்வி உளவியல்.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசான் 415 குறைகளை வெளிப்படுத்தல்: ஆசிரியரிடமும் நிர்வாகத்தினரிட மும் பரஸ்பர ஒத்துழைப்பும் தன்-மதிப்பும் வளர்ந்தவுடன், ஒவ்வொரு வரும் தம்மிடமுள்ள குறைகளை மற்றவருக்கு எடுத்துச் சொல்லும் துணிவு ஏற்படுகின்றது. குறைகளை எடுத்துக் காட்டுவதில் உண்டாகும் அச்சம் நாளடைவில் மறைந்துவிடுகின்றது. பரஸ்பர நம்பிக்கையாலும் ஒத்துழைத்துச் சமாளிப்பதலுைம் அக் குறைகளைக் சிறுகச் சிறுகக் களைந்துவிடலாம் என்று இருவருமே உணர்கின்றனர். பெரும்பாலும் ஆசிரியர் குழந்தையிடம் எப்படிப் பழகுகின்ருரோ அப்படியே தலைமை யாசிரியரும் ஆசிரியரிடம் பழக வேண்டும் ; உறவு கொள்ள வேண்டும். தொழில்துறைக் கற்றலில் கிர்வாகம் ஆசிரியருக்குத் துணை புரிய விழைந்தால் அது ஆசிரியரிடம் கலந்து யோசித்த பல செய்திகளை மறை வாகவே வைத்துக் கொள்ள வேண்டும். மேற்கூறிய கிலை எய்தப்பெறின் ஆசிரியர் தன் சொந்த மதிப்பையும், மாளுக்கர்களின் வளர்ச்சியில் பொறுப்புள்ள தன் பங்கையும் உணர்கிருர். கற்பித்தலும் ஆசிரியர் ஒருமைப்பாடமைந்த ஆளுமையைப் பெற உதவும் ஒரு தொழிலாகத் திகழும். ஆசிரியர்-சமூக உற்வுகள்: ஆசிரியர் மாளுக்கர்களுடனும் கிர் வாகத்துடனும் மன ஒன்றலை அமையச் செய்வதுடன் சமூகத்துடனும் நெருங்கிய உறவு முறைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய உறவு முறைகளால் மாளுக்கர்களின் முயற்சிகள் வெற்றியடைவதற்கும், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் ஓங்குவதற்கும் அவர்களுடைய மகிழ்ச் சிக்கும் சாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்தும். சரியான உறவுமுறைகள் அமையாவிடின், ஆசிரியருக்கும் மதிப்பு குறையும்; சமூகத்தாலும் பள்ளிக்கு எவ்வித நன்மைகளும் ஏற்படா. தக்க உறவு முறைகள் அமை யின் மாணுக்கர்களும் கன்முறையில் கற்பர்; ஆசிரியர்களின் தன்-மதிப்பும் உயரும். கீழ்க்கண்ட சாதனங்களால் இத்தகைய உறவு முறைகளை ஏற் படச் செய்யலாம். பள்ளி நிகழ்ச்சிகளும் சமூகத் தேவைகளும்: சமூகத் தேவை களுக்கேற்றவாறு பள்ளி நிகழ்ச்சிகளை அமைக்க வேண்டும். இதனால் சமூகம் பள்ளி நிகழ்ச்சிகளைப்பற்றி நன்கு அறிந்து பள்ளியின் மீது அக் கறை காட்டும். மாளுக்கர்களும் கல்வி எவ்வாறுவாழ்க்கைப் பயனுடையது என்பதை நன்கு அறிவர். முதியோர் கல்வி, நூலகம், படிப்பகம், படக் காட்சிகள், கண்காட்சி, பல்வேறு கொண்டாட்டங்கள் முதலிய சாதனங் களைக் கொண்டு சமூக உறவுகளை கன் முறையில் அமைக்கலாம். 2 Suo sopsums - confidential.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/437&oldid=778447" இலிருந்து மீள்விக்கப்பட்டது