பக்கம்:கல்வி உளவியல்.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 கல்வி உளவியல் வீட்டு-வேலை : மாளுக்கர்களுக்குத் தரப்பெறும் வீட்டு-வேலையும் ஆசிரியர்-பெற்றேர் உறவினை உண்டாக்கத் துணை செய்கின்றது. சில சமயம் ஆசிரியர் மாளுக்கர்களுக்குத் தரும் வீட்டு.வேலையை மாளுக்கர் களும் புரிந்து கொள்வதில்லை; அவர்களால் தம் பெற்றேர்களுக்கும் புரிந்து கொள்ளச் செய்ய இயலுவதில்லை. சில சமயம் வீட்டு-வேலை பள்ளி வேலைக்குத் துணையாக இல்லாது பள்ளி-வேலையையே திரும்பச் செய்யும் முறையில் அமைந்து விடுகின்றது. வீட்டு-வேலை தருவதில் ஆசிரியர் சில சமயம் பெற்ருேர்களின் துணையையும் நாடலாம். (எ.டு.) வீட்டு வரவு-செலவுத் திட்டம், வருமான வரி, பொருள்களை வாங்கும் திட்டங்கள் போன்றவற்றை வீட்டு வேலைக்குப் பயன்படுத்துவதால் பெற். ருேர்-ஆசிரியர் கூட்டுறவு ஏற்படுகின்றது. . குறைகூறுதலைப் பயன்படுத்துதல் : பெற்றேர்களோ பிறரோ தம் முடைய வேலையைப்பற்றிக் கூறும் குறைகளை ஆசிரியர்கள் ஆக்க முறையில் பயன்படுத்தும் திறனைப் பெறுதல் வேண்டும். பெற்றேர்கள் கூறும் கருத்தேற்றங்களைப் பெரும்பாலும் ஆசிரியர்கள் தவருகவே எடுத் துக்கொள்ளுகின்றனர்; சில சமயம் தம்மை அவமதிக்கும் பேச்சாகவே அவற்றைக் கருதுகின்றனர். பெற்றேர்கள் தம்குழந்தைகளிடம் நெருங்கிப் பழகுவதால், அவர்கள் ஆசிரியர்கள் வரவேற்பார்கள் என்றே தம் குழந்தைகளைப்பற்றிச் சில குறிப்புக்களைத் தருவர். ஆசிரியர்கள் அவற்றை நன்முறையில் ஏற்றுத் தக்கவாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களும் பெற்றேர்களிடம் குழந்தைகளைப்பற்றிய ஆக்க முறைக் கருத்தேற்றங்களைச் சமயமறிந்து கூறுவதில் பழக்கம் பெறவேண்டும். இன்னுெரு உண்மையும் ஈண்டு கவனித்தற்பாலது. பிற துறைகளில் தலையிட்டுக் குறை கூருதவர்கள் ஆசிரியத்தொழிலில் தலையிட்டுக் குறை கூறுகின்றனர். ஆசிரியர்கள் அக்குறைகளைத் தங்கள் தகுதி யுடைமை யாலும், சாமர்த்தியத்தாலும் சமாளிக்க வேண்டும். பல ஆசிரியர்கள் கண்ணியமாகப் பாராட்டப்பெருமலும் இல்லை. பக்குவம் பெருத குழந்தை களிடம் அதிகமாகப் பழகுவதால் ஆசிரியர்களுக்குத் தகுந்த பாராட்டு கிடைப்பதில்லை. வழக்கறிஞர், மருத்துவர் ஆகியவர்கள் பக்குவமடைந்த பெரியோர்களுடன் பழகுவதால் அவர்களின் திறமை அறியப்பெற்றுப் பாராட்டப் பெறுகின்றனர்.

    • &#=Gæpš SGšēz Hpid - constructive suggestion.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/438&oldid=778449" இலிருந்து மீள்விக்கப்பட்டது