பக்கம்:கல்வி உளவியல்.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசான் 417 பள்ளிவசதிகளை முதிர்ந்தோர் பயன்படுத்தும் ஏற்பாடு : பள்ளிப் படிப்பகத்தையும் நூலகத்தையும் வார விடுமுறை நாட்களிலும், வேலை நாட்களின் இரவு நேரத்திலும் சமூகம் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புக் களை அமைத்துத் தரலாம். ஆடு களத்திலும் விளையாடும் ஏற்பாடுகளை ஒரளவு அமைத்துத் தரலாம். வேறு சாதனங்கள் : பெற்ருேர்க் கழகம், பிள்ளைகளின் வீடுகளைப் பார்வையிடுதல், பள்ளிப் பிரசாரம், பழைய மாளுக்கர் சங்கம், தேர்ச்சி அறிக்கைகள் முதலிய சாதனங்களால் சமூகத்துடன் ஆசிரியர்கள் உறவு முறைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். ஆசிரியத் தொழிலின் சிறப்பு: இவ்வுலகில் ஆசிரியத் தொழிலைப் போல் வேருெரு சிறந்த தொழிலைக் காண்பது அரிது. மக்கள் சமுதாயம் முழுவதும் ஆசிரியர்கள் மூலம்தான் உருப்படுகின்றது. தனியாட்களின் வாழ்க்கையை உருவாக்குவதற்கு இதனைப்போல் வாய்ப்புக்களை கல்கும் வேருெரு தொழில் இவ்வுலகில் இல்லை என்று சொல்லலாம். ஆசிரியத் தொழிலை மக்கட் சமுதாயத்தை உருவாக்கும் மானிடப் பொறியியல் தொழில் என்று கூறினும் பொருந்தும். நாள்தோறும் கள்ளங்கபடமற்றுத் தூய்மையான சிந்தையுடன் அறி வினைப் பெறுவதற்காகப் பள்ளிகளுக்கு வரும் தெய்வ உருவங்களாகிய குழந்தைகளிடம் பழகுவது பேரின்பத்தைத் தருவதாகும். எண்ணற்ற குழவிகளின் அறியாமையைப் போக்கி அறிவினை ஊட்டும் ஆசிரியர்கள் பாரதப்போரில் அர்ச்சுனனுக்கு ஏற்பட்ட தற்காலிக மயக்க உணர்வையும் அஞ்ஞான இருளையும் அகற்றி ஞானத்தை ஊட்டிய கீதாசிரியன் நிலையில் இருக்கின்றர்கள். இவர்களது தொண்டினை எந்த அளவு கோலாலும் அளக்க முடியாது. தமக்கென வாழாது பிறர்க்கென வாழ்வதல்ை உண் டாகும் இன்பமே அவர்கள் பெறும் பரிசாகும். சில குறைபாடுகள்: உரோசாமலரிலும் முள்ளுண்டு; இன்பத்திலும் துன்பம் உண்டு. ஆசிரியர்களும் மனிதர்களே. அவர்களுக்கும் பாதுகாப்பு, பாராட்டு, புதிய அனுபவம், விடுதலை முதலியவை வேண்டும். இவை தடைப்படின் ஆசிரியர்கள் தம் பணியைத் திறனுடன் செய்ய இயலாது. ஆசிரியர்களின் ஊதியக் குறைவு உலகறிந்த செய்தி. இதன் காரண மாகவே தகுதியுடைய பலர் இத்தொழிலை மேற்கொள்ள முன்வருவ தில்லை. இத்தொழிலை மேற்கொண்டவர்கள் பலர் பொருளாதார நிலையால் சொல்லெர்ணுத் துயரம் உறுகின்றனர். க.உ.27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/439&oldid=778451" இலிருந்து மீள்விக்கப்பட்டது