பக்கம்:கல்வி உளவியல்.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418 கல்வி உளவியல் இன்னெரு முக்கிய செய்தி. சமூகம் ஆசிரியர்களிடம் துறவிகளிடம் இருப்பதைப் போன்ற கடுமையான நடத்தையை எதிர்பார்க்கின்றது. ஆசிரியர்கள் சிறந்த பண்புகளின் இருப்பிடமாக இருத்தல் வேண்டும் என்று சமூகம் கருதுகின்றது; அரசினரும் அங்ங்னமே கருதுகின்றனர். சிறுவர்களுக்கு முன்மாதிரியாக இருத்தல் வேண்டும் என்பது அனைவ ருடைய விருப்பம். எடுத்துக்காட்டாக, புகை பிடித்தல், பொடி போடு தல், சீட்டாடுதல் போன்ற செயல்கள் ஆசிரியர்கட்குச் சிறிதும் தகுதி யற்றவை என்று கருதப்பெறுகின்றன. ஆனால், ஆசிரியர்களின் தீப்பேற் றின் காரணமாக சமூகமோ, அரசினரோ அவர்கள் ஆற்றும் தொண்டிற் கேற்பவும், தாம் அவர்களிடம் எதிர்பார்க்கும் பிறவற்றிற்கேற்பவும் கெளரவமோ ஊதியமோ அளிக்கப்பெறுகின்றதா என்பதைச் சிறிதும் சிக்தித்துப் பார்ப்பதில்லை. வக்கு அற்றவனுக்கு வாத்தி என்ற ஏளனச் சொற்ருெடர் பலர் வாயினின்றும் பிறக்கின்றது. குழந்தைகளோடும் பள்ளியோடும் அனுபவமில்லாத முதியோர் பலர் ஆசிரியத் தொழிலை எளிதென்று கருதுகின்றனர். உண்மையாக எண்ணிப் பார்த்தால் அதைப்போல் கடுமையான வேலை நெருக்கடி பிற தொழில் களில் இல்லை. பாடத்திட்டப்படிக் கற்பித்தல், பிரச்சினைகளை முன்பே சிந்தித்தல், சிறுவர்களை ஊக்குதல், அவர்கள் வேலையை நன்கு மதிப் பிடல், தவறுகளை எதிர்பார்த்துத் தடுத்தல், அவற்றிற்குத் தக்க மாற்றுக் களைக் காணல், வேலையின் பல பகுதிகளை இணைத்தல், சிறுவர்களின் ஊசலாடும் கவனத்தை நிலை நிறுத்தல் போன்றவை செய்வதற்குப் பள்ளி நேரம் முழுவதும் தேவை. அந்நேரத்திற்கு முன்பும் பின்பும் செய்ய வேண்டிய வேலைகளும் உள்ளன என்பதைப் பலர் அறிவதில்லை. விடு. முறை நாட்களிலும் வேலையிருக்கின்றது. இவற்றைத் தவிர, ஆசிரியர்கள் சிறுவர்கள், தலைமையாசிரியர், தணிக்கையாளர், கிர்வாகிகள், பெற்றேர், ஊரார் போன்ற பலருக்குச் சமாதானம் சொல்ல வேண்டியிருக்கின்றது. இன்ளுெரு இக்கட்டான நிலை ஆசிரியருக்குண்டு. இன்று நாட்டில் நிலவும் எந்தக் கட்சிகளிலும், கட்சி அரசியலிலும் ஆசிரியர் சேரக்கூடா தென்பது. இதைச் சரியென்றே ஒப்புக்கொள்வோம். பல கட்சியைச் சேர்ந்த பெற்றேர்களின் குழவிகள் பள்ளிக்கு வருகின்றனர். படிப்பதற் கென்றே அவர்கள் பள்ளிக்கு வருகின்றனர். ஆசிரியரும் பயிற்றுவதற். கென்றே பள்ளிக்கு வருகின்றர். இந்தப் பள்ளி நேரத்தைப் பாடம்பற்றிய செய்திகளைப் புகட்டுவதற்கு மட்டிலுமே பயன்படுத்த வேண்டும். தவிர, இளமைப் பருவம் அறிவு பெறுவதற்கென்றே ஒருவரது வாழ்க்கையில் ஒதுக்கப்பெற்ற பகுதி. அப்பருவத்தில் அறிவு பெறுவதற்கான செயல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/440&oldid=778455" இலிருந்து மீள்விக்கப்பட்டது