பக்கம்:கல்வி உளவியல்.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசான் 421 வாழ பள்ளிகள் பயிற்றுகின்றன. வெளியுலகத்தைவிட சிக்கலற்ற கிலேய மாகும். பள்ளியில் அனுபவமும், முதிர்ச்சியும், மதிப்பும் பெற்ற பள்ளி ஆசிரியர்கள் மாளுக்கர்கட்கு வேண்டிய துணை புரிகின்றனர். வெளி யுலகில் இத்தகைய வாய்ப்புக் கிடைப்பது அரிது. குழு வாழ்க்கை வாழ் வதற்குப் பள்ளியைவிடச் சிறந்த நிலையம் வேறென்று இல்லை. தற்காலப் பள்ளியே மக்களாட்சி முறைபற்றிய பயிற்சிக்கு ஏற்ற இடமாகும். பள்ளிகள் குழந்தைகளிடம் தன்னம்பிக்கை, உற்சாகம், குழு உணர்ச்சி, ஒத்துழைப்பு, வெற்றி மனப்பான்மை போன்ற சமூகப் பண்புகளை வளர்க் கின்றன. அன்பு, பாராட்டு, பொறுப்பு, உரிமை, தீரச்செயல்களுக்கு வாய்ப்பு போன்றவை பள்ளிகளில் நிலவுகின்றன. இவை யாவும் மாளுக் கர்களிடம் வளர ஆசிரியர் நல்ல முறையில் கண்காணிப்பு செய்து வருகின்ளுர்; இ.து ஆசிரியரின் சமூகப் பொறுப்பாகவும் ஆகின்றது. ஆசிரியரின் முக்கியத்துவம் மேட்ைடு அறிஞர் ஒருவர் இவ்வாறு எழுதுகின்றர்: " உயர்நிலைப்பள்ளிக் கல்வியில் எல்லாவற்றையும் விட ஆசிரியரே மிகவும் செல்வாக்குள்ள கூறு ஆகும். கல்வி ஏற்பாடு', அமைப்பு", தளவாடங்கள்" ஆகியவை முக்கியவையாயினும், உயிருடனும் இயங் கும் ஆசிரியரின் ஆளுமையால் உணர்வூட்டம் பெருவிட்டால் அவை கணக்கில் எடுத்துக் கொள்ளப் பெரு.” பிரெளன்' என்பாரின் இக்கூற்று எல்லா நிலைக் கல்விக்கும் முற்றி லும் பொருந்தும் என விளக்க வேண்டியதில்லை. ஒரு நாட்டின் பெருமை அதன் பரப்பு, மலைகள், காடுகள்,கணிகள்', ஆயுதச் சாலைகள், கட்டடங் கள் ஆகியவற்றைப் பொறுத்ததன்று; ஆளுல் அது அந்நாட்டின் பள்ளி களின் நிலையையும், ஆசிரியர்களின் தன்மையையும் பொறுத்ததாகும். இப்பேறு ஆசிரியருடையதே என்பது வெளிப்படை. எல்லாத் தொழில்களும் சமூகச் சேவையேயாயினும் வருங்கால நற் குடிகளை உருவாக்கும் அருட்பணி ஆசிரியர் பொறுப்பில்தான் இருக் கின்றது. குழந்தையின் உடல், உள்ளம், நடத்தை முதலியவற்றைச் சீர் திருத்தி அதனிடம் சிறந்ததோர் ஆளுமையை வளர்ப்பது ஆசிரியரின் கையில்தான் இருக்கின்றது. விடுதலை பெற்ற நம் நாட்டில், வயது வந்தோர் 31 ss) est 57 hu TG - Curriculum. 32.9ļsotoùų - organization. * 8 ser surl_b - equipment. 34.8rown, J.F: The American High School, p. 78. 3 s assissir - mines.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/443&oldid=778462" இலிருந்து மீள்விக்கப்பட்டது