பக்கம்:கல்வி உளவியல்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. மனிதனும் சூழ்நிலையும் பொருத்தப்பாடு விந்த உயிரியும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னைமாற்றிக்கொள் ளும். இதுவே வாழ்க்கையின் இலக்கணம் என்றுகூடக் கூறலாம். மனிதனும் ஒருவகை உயிரியே. ஆகவே, அவனும் தன் சூழ்நிலையோடு இடையருது இடைவினை இயற்றிப் பொருத்தப்பாடு' அடைகின்றன். பொருத்தப்பாடு என்பது என்ன ? மனிதன் தனக்கும் தன் சூழ்நிலைக்கும் இயைந்த தொடர்பை அடையும் பொருட்டுத் தன் நடத்தையை இடை விடாது மாற்றும் முறையே பொருத்தப்பாடு என்பது. பொருத்தப்பாடு அமைந்தால்தான் எல்லா உயிர்களும் வாழ வழி அமையும் அன்றேல் சாகவேண்டியதுதான். ஒரு செடியோ தவளையோ தான் இருக்கும் சூழ் கிலைக்கேற்றவாறு தன்னை அமைத்துக் கொண்டால்தான் உயிர்வாழலாம்; இன்றேல் மரித்துவிடும். ஆனல், உயர் இன உயிராகிய மனிதனின் நோக்கம் வேறு. மனிதன் சூழ்நிலையுடன் பொருத்தப்பாடு அடைவது மூன்று விதங்களில்ை. ஒன்று, தன் நடத்தையையும் மனப்பான்மைகளையும் சூழ்நிலைக்கேற்ற வாறு மாற்றிக் கொள்வது , மற்றென்று, தன் நடத்தைக் கேற்றவாறு சூழ்நிலையை மாற்றி அமைத்துக் கொள்வது ; பிறிதொன்று, இரண்டுங் கலந்த கலவையினல் அமைத்துக் கொள்வது. குழந்தைப் பருவத்திலும் குமாரப் பருவத்திலும் இப்பொருத்தப்பாடு தீவிரமாக நடைபெறுகின்றது. மனிதனின் நோக்கம் வாழ்க்கை மட்டுமன்று ; உண்மை, நேர்மை, அழகு போன்றவை நிறைந்த நல்வாழ்க்கையாகும் அது. மனிதன் பெளதிகச் சூழ்நிலைக்கும் சமூகச் சூழ்நிலைக்கும் இணங்க மாறுபாடுகளை அடை * Gur(5$5ủuTG-adjustment. 2 Ibu-šeng-behaviour. sa Guer# sé Sgsflåd–physical environment. 4 சமூகச் சூழ்நிலை-social environment.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/46&oldid=778498" இலிருந்து மீள்விக்கப்பட்டது