பக்கம்:கல்வி உளவியல்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கல்வி உளவியல் பொருட்டு ஒரு முக்கிய விவிைற்கு விடை தேடுகின்றன். கையிலுள்ள புத்தகத்தைப் பார்த்து உணர்கின்றன். ஒரு மூலையில் இரண்டுபேர் பேசு வதைக் கேட்கின்றன். சாளரத்தின் வழியாகப் பரந்த பொட்டலிலிருந்து வீசும் வெப்பக்காற்றை உணர்கின்றன். இதற்கிடையே கல்லூரிமுதல்வர் வருகையால், அவருக்கு மரியாதை செலுத்துவான் வேண்டி எழுந்து கிற்கின்றன். இத் தூண்டல்கள் யாவும் வெவ்வேறு அளவுகளில் அவனைத் தாக்கியபோதிலும் அவன் கவனம் முக்கியமாக அவன் முன்னிருக்கும் புத்தகத்திலேயே உள் ள து. அவன் இத் தூண்டல்களையெல்லாம் உணர்ந்த போதிலும் படித்தல் என்னும் செயலிலேயே சிறப்பாக ஈடுபட் டுள்ளான். இவ்விதமாகப் பலப்பல வகைகளில் நாம் தூண்டப்பெற்றுச் செயலாற்றுவதல்ை பொருத்தப்பாட்டு உறுப்புக்களைப்பற்றிச் சற்று ஆராய்வது நலம் பயக்கும். அவற்றை மேலே காண்போம். மேலும், குழந்தை தனித்து வாழ்வதில்லை. பிறருடன் கூடியே வாழ் கின்றது. ஆகவே, அது சமூகச் சூழ்நிலைக்கும் பொருத்தமுறவேண்டும். பொருத்தப்பாட்டில் உடல்வளர்ச்சி, இயக்க வளர்ச்சி, உள்ளக்கிளர்ச்சி வளர்ச்சி, சமூகப் பண்பு வளர்ச்சி ஆகியவற்றைக் காண்கின்ருேம். இச் செயல்களின் வகைகளையும் நன்கு அறிந்தால்தான் ஆசிரியர் முழுக் குழந்தையின் வளர்ச்சியில் துணைபுரியக் கூடும். நரம்பு மண்டலம் குழந்தை என்பது உடல், உள்ளம் என்ற இரண்டின் சேர்க்கையாகும். இவை இரண்டும் நெருங்கிய தொடர்புடையவை. ஒன்று மற்றென்றை ஆட்சி செலுத்த வல்லது. உடல் சோர்வுற்றிருக்கும்பொழுது மனம் வேலை செய்ய மறுக்கிறது. அங்ங்னமே, மனம் கவலையுற்றிருக்கும்பொழுது உடல்வேலை அலுப்பாக இருக்கின்றது. உள்ளத்தின் எண்ணங்களும் விருப்பங்களும் உடலின் உறுப்புக்களை இயங்குவிக்கின்றன. மனத்தின் செயல்களால் இரண்டு பயன்கள் உண்டு. ஒன்று, தனி யாளை ஒன்றுபடுத்துவது. மற்ருென்று, அத் தனியாளைச் சூழ்நிலைக் கேற்றவாறு பொருத்தமுறச் செய்வது. இந்த இரண்டு நோக்கங்களையும் முற்றுவிப்பது மிகச் சிக்கலாக அமைந்துள்ள நரம்பு மண்டலம். உடலின் ஒரு பகுதி மற்ருெரு பகுதியுடன் தொடர்பு கொள்வதற்கும், உடலின் எல்லாப் பகுதிகளும் வெளியுலகத்திலிருந்து செய்திகளை அறிவதற்கும், அச் செய்திகளுக்கேற்றவாறு செயற்படுவதற்கும் நரம்பு மண்டலம் துணைபுரிகின்றது. எனவே, நம்முடைய செயல்களனைத்தும் நரம்பு மண்ட லத்தின் நலத்தைப் பொறுத்திருக்கின்றது. ஆகவே, காம்பு மண்டலத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/53&oldid=778580" இலிருந்து மீள்விக்கப்பட்டது