பக்கம்:கல்வி உளவியல்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனும் சூழ்நிலையும் 33 தைப்பற்றி நாம் அறிந்துகொள்வது இன்றியமையாதது. உளவியலா ருக்கு இன்றியமையாதனவாக உள்ள ஒரு சில செய்திகளை மட்டிலும் ஈண்டு தொகுத்துக் கூறுவோம். நரம்பு மண்டத்தில் மூன்று முக்கியப் பகுதிகள் உள்ளன. அவை: 1. நடு நரம்பு மண்டலம் : 2. வெளி நரம்பு மண்டலம்89 , 3.தன் ட்ைசி நரம்பு மண்டலம்.49 இவை ஒவ்வொன்றையும் தெரிந்து கொள் வதற்கு முன் நரம்புகளின் அமைப்பையும், வகைகளையும், உறுப்புக்களை யும், தொழில்களையும் அறிந்துகொள்ள வேண்டும். . நரம்புகளின் அமைப்பு : உயிரணு இன்னதென்பதை நாம் நன்கு அறிவோம். நரம்பு மண்டலத்தின் மிகச் சிறு அணு நரம்பணு என்பது. இதனை நரப்பம்' என்று வழங்குவோம். தொலைபேசிக் 4: கம்பியில் 1 மெல்லிய கம்பிகள் சேர்ந்து கட்டப்பெற்றுக் கிடப்பதைப் போலவே படம்-1: நிரப்ப அணு நரம்பும் பல இழைகள் சேர்ந்து ஓர் உறையில் அமைக்கப்பெற்றுள்ளது. இவ் விழைகள்தாம் நரப்பங்கள். நரம்பு மண்டலம் பலகோடி நரப்பங்க ளால் ஆனது. நமது உடலில் 9, 200,000,000 நரப்பங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கம்புகின்றனர்.

38 IEG, so tou to situ sysb-central nervous system. 89 Glousfibrobu to girl-goth-peripheral nervous system. 49 gorgo & bribu bor-oautonomic nervous system. 41 Isrüuth-neurone. ** @gm & Guà-telephone. - 3 - هسع. تتة

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/54&oldid=778582" இலிருந்து மீள்விக்கப்பட்டது