பக்கம்:கல்வி உளவியல்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கல்வி உளவியல் சிறுமூளைக்கு மேலாக, பாலம் என்றதொரு பெரிய அம்ைப்பு உள்ளது. இது நரம்பு நார்களாலும் நுட்பமான பொருத்தப்பாட்டு மையங்களாலும் ஆகியது. சிறுமூளைக்கும் பாலத்திற்கும் மேலாகப் பல வகை அடுக்குக்கள் அமைந்த சிறந்த இணைப்பு மையங்கள் உள்ளன. இவை உள்துடிப்புப் பொருத்தப்பாட்டிலும் உயிரி சூழ்நிலையோடு பொருத்தமுறும் செயலிலும் அதிகப் பங்கு கொள்ளுகின்றன. இம் மையங்களைப்பற்றி நாம் அறிந்தது சிறுபகுதியே , அறியாதது பெரும் பகுதி உள்ளது. உடற்பாகுபாட்டு முறையில் அவற்றின் தொடர்புகளை இங்குக் கூறுவதற்கில்லை. பாலத்தின் மேற்புறமாக நடுமூளை என வழங்கும் மூளையின் ஒரு பகுதி உளது. அவ்விடத்தில்தான் அதிகமான மண்டை நரம்புகள்-சிறப்பாக கண் நகர்ச்சியுடன் தொடர்பு கொண்டிருப்பவை-தொடங்குகின்றன. பெருமூளைக்குக் கீழே அமைந்திருப்பது பூத்தண்டு' என்ற உதவி மையம். இதன் முக்கிய வேலை பொறிகளிலிருந்து வரும் உள்துடிப்புக் களை மூளைக்குக் கடத்துவதாகும். இதனுடன் இணைந்த துணைப்பூத் தண்டு, மேற்பூத்தண்டு' ஆகியவை உடல்வளர்ச்சியில் முக்கியப் பங்கு கொள்ளுகின்றன, மேற்பூத்தண்டுதான் பசி, தூக்கம், உடல் வழியாக வெளிப்படக்கூடிய உள்ளக் கிளர்ச்சி ஆகியவைகளே ஓரளவு கட்டுப்படுத்துகின்றது. மேலும், தன்னுட்சி நரம்பு மண்டலத்தையும் உயர் முறையில் கட்டுப்படுத்துகின்றது. இதனுடன் இணைந்திருப்பது அடித்தலைச்சுரப்பி ; எண்டோகிரீன் மண்டலத்தின் அரசன் போல் செயற்படுவது. - - பெருமூளை : மானிட மூளையின் பெரும்பகுதி பெருமூளையே'. இது மண்டையோட்டினுள் இரண்டு அரைக்கோளங்களாகப் பிரிவுபட்டுக் கிடக்கின்றது. இது நெருங்கி அமைக்கப்பெற்ற பெரும் நரம்பணுத் தொகுதிகளால் அமைந்தது. சற்றேறக்குறைய மண்டையோடு முழு வதையும் இது நிரப்புகின்றது. மனிதனின் மூளை மிருகங்களின் மூளையை விட(யானை, திமிங்கலம் நீங்கலாக)க் கனமாகவும் பெரிதாகவும் உள்ளது. யானைமூளையின் எடை சுமார் 12 இராத்தல்கள்; திமிங்கல மூளையின் எடை சுமார் 10 இராத்தல்கள் ; மனித மூளையின் எடை கிட்டத்தட்ட 3 இராத்தல்கள். உடல் எடையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், மனிதமுளை தான் யானை, திமிங்கலம் ஆகியவற்றைவிடப் பெரிதென்பது புலகுைம். 58 பாலம்-pons. 5.9 பூத்தண்டு-thalamus, 30 மேற்பூத்தண்டு hypo-thalamus. 81 yış gåvá strůst - pituitary gland. o o Gugstp&rcerebrum.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/61&oldid=778598" இலிருந்து மீள்விக்கப்பட்டது