பக்கம்:கல்வி உளவியல்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனும் சூழ்நிலையும் 43 சுரப்பிகளையோ அடைதல் வேண்டும். புறத்தே தாக்கும் தூண்டல்களே யன்றி உடலிலுள்ளிருந்தும் தூண்டல்கள் எழுகின்றன. இவற்றுள் சிற் சில துடிப்புக்கள் ஒன்றையொன்று தாங்கி வலியுறுத்துகின்றன. மற்றும் சில ஒன்றையொன்று தடுத்து நிறுத்துகின்றன. எனவே, மனிதன் இத்தகைய மிகச் சிக்கலான பொருத்தப்பாட்டின் மூலமாக நுணுக்கமும், வேற்றுமைகளும், திட்டமும் பொருந்திய இயக்கத் துலங் கள்களைக் கற்றுக் கொள்கின்றன். பொருத்தப்பாடும் மதிநுட்பமும் அமைந்த நடத்தை அவனிடம் தோன்றுகின்றது. தன்னுட்சி நரம்பு மண்டலம்: மேற்கூறிய நரம்பு மண்டலம் நாம் வெளியுலகத்துடன் தொடர்பு கொண்டு ஆற்றும் செயல்களில் பங்கு பெறுகின்றது. ஆனல், நடத்தை என்பது எப்பொழுதும் வெளிச் சூழ் நிலையை மாற்றுவதுமட்டிலும் இல்லை. சில சமயங்களில் நம் உடல் உறுப்புக்களுள்ளேயும் மாறுதல்கள் நிகழ்வனவாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக, சினம் போன்ற உள்ளக் கிளர்ச்சியால் குருதியோட் டம் அதிகரிக்கின்றது. இந்த நடத்தை உட்புற நடத்தை (implicit) என வழங்கப் பெறும். இம் மாதிரி நடத்தைகளில் செயற்படுவதற்குரிய மண்டலமே தன்னட்சி நரம்பு மண்டலமாகும். இதிலுள்ள நரம்புகள் முதுகெலும்பின் இருபுறங்களிலும் சங்கிலித் தொடர்போல் சிறிய உருண்டையான நரம்பணுத் திரள்களாக' அமைந்திருக்கின்றன. இவ் விரண்டு சங்கிலிகளும் மண்டையோட்டிலிருந்து முதுகு நரம்பின் அடிப் பாகம் வரையிலும் செல்லுகின்றன. உயிர் நூற்படி இம் மண்டலம் நரம்பு மண்டலத்தின் மிகப் பழமை யான பகுதியாகும். இதில் இரு பகுதிகள் உள : (1) பரிவு நரம்பு மண் டலம்' இதனுடைய நரம்புகள் இதயம், நுரையீரல்கள், சில பிரத்தி யேகமான சுரப்பிகள் ஆகியவற்றிற்குச் செல்லுகின்றன. ஒரு விபத்தில் அல்லது கிளர்ச்சிதரும் சந்தர்ப்பத்தில், உயிரி மிக அதிகமாகத் தூண்டப் பெறுகின்றது; இதல்ை அதிக இதயத்துடிப்பு, விரைவான சுவாசித்தல் போன்ற செயல்கள் நடைபெறுகின்றன. இதனுல் வெகுண்டு எழுதலோ அல்லது வெருண்டோடுதலோ மிகவும் பொருத்தமாக அமைகின்றது: எனினும், இது செரிமான மண்டலத்தின் தற்காலிகப் பாதிப்பால் நடை பெறுகின்றது. இப் பரிவு நரம்பு மண்டலத்துடன் மிகவும் இணைந்து நிற்பது துணைப்பரிவு மண்டலம். (2) துணைப்பரிவு நரம்பு மண்டலம்’ (para-sympathetic system) : @ğı Glæusůls (psh Gaffluu Losari-a)# 14 நரம்பணுத்திரள்கள் - nerve ganglia. 1.5 பரிவு நரம்பு மண்டலம் Sympathetic System. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/64&oldid=778604" இலிருந்து மீள்விக்கப்பட்டது