பக்கம்:கல்வி உளவியல்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கல்வி உளவியல் திற்கு நேரடியாக முரண்பட்டதாகும். இது உயிரியைப் பழைய கிலேக்கே கொண்டுவருவதற்குத் துணைசெய்கின்றது. தும்பிலாச் சுரப்பிகள் உள்ளக் கிளர்ச்சிகளுடன் தொடர்புள்ள தூம்பிலாச் சுரப்பிகளை மேலே குறிப்பிட்டோம் அல்லவா? இச் சுரப்பிகள் நரம்பு மண்டலத்துடன் இணைந்தும், தம்மொடுதாம் இணைந்தும் செயற்படுகின்றன. இச் சுரப்பிகள் ஒவ்வொன்றைப்பற்றியும் ஓரளவு தெரிந்து கொள்ளுதல் உளவியல் பயிற்சிக்குத் துணையாக இருக்கும். புரிசைச் சுரப்பி ; இது கழுத்தின் அடிப்பாகத்தில் குரல்வளை மணி'க்கு இரு புறங்களிலும் அமைந்துள்ளது. (படம் 7: புரிசைச் சுரப்பி (முன்புறத் தோற்றம்). 1. வலப் பக்க வாட்டு இதழ் , 2. ஒடுக் கப் பகுதி (isthumus); 3. இடப் பக்கவாட்டு இதழ் , 4. மூச்சுக் குழல்; 5 அடிப் புரிசைச் சுரப்பிச் சவ்வு , 6. நா அடி எலும்பு. மிகவும் சுறுசுறுப்பாக இயங்கக் கூடிய புரிசைச் சுரப்பியைக் கொண்டவர்கள் - மிகவும் நரம்புத் தளர்ச்சியுடனிருப்பர் ; அவர்கள் உடல் அடிக்கடி வியர்க்கும்; அவர்கள் மிகவும் பலக்குறைவுடையவர். களாகவும் இருப்பர். அவர்கள் உடலின் எடை அடிக்கடி குறையும்; சிலசமயம் அதிகக்கவலை யுள்ளவர்களாகவும் இருப்பர். துணைப் புளிசைச் சுரப்பிகள் : இவை புரிசைச் சுரப்பியின் பின்புறமாக, பக்கத்திற்கு இரண்டாக அமைந்துள்ளன. (படம்-8 : துணைப் புரிசைச் சுரப்பிகள் (கறுப்பாகக் காட்டப்பெற்றுள்ள பகுதி கள்); புரிசைச் சுரப்பியின் பின்புறத்தில் அவற்றின் இருப்பிடத்தைக் காட்டுகின் றன. 1. துணைப்புரிசைச் சுரப்பிகள் , 2. புரி சைச் சுரப்பி (பின்புறத் தோற்றம்); படம் 7 : புரிசைச் சுரப்பி. 3. மூச்சுக் குழல். இச் சுரப்பிகள் உடலில் கால்சியம், பாஸ்வரம் ஆகிய இரண்டின் உப்புக்களின் அளவினைக் ze ufisoes gyüg-thyroid gland. 77 “ Ersòsår ocwf'- Adam's Apple. துணைபுரிசைச் சுரப்பிகள் - para-thyroids.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/65&oldid=778606" இலிருந்து மீள்விக்கப்பட்டது