பக்கம்:கல்வி உளவியல்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனும் சூழ்நிலையும் 47 கள் தோன்றுவதில்லை. குழந்தையின் ஏழெட்டு யாண்டுகளுக்குப்பின் இச் சுரப்பி சுருங்கத்தொடங்குகின்றது. அப்பொழுது புணர்ச்சி என்ற இயற்கைச் செயல் நிலையும் வளர்ந்து முற்றத்தொடங்கும். பால்நிலைச் சுரப்பிகள்: ; ஆணிடம் விரைகளாகவும்.கே, பெண். ணிடம் சூற்பைகளாகவும் காணப்பெறுபவை. இவற்றை உடலியலார் பொதுவாக இனகோளங்கள்97 என்று வழங்குவர். பிறந்த நாள் கிதாட்டுக் குமரப் பருவம் வரையிலும் இவற்றில் யாதொரு செயலும் கடைபெறுவதில்லை ; ஆகவே, குழந்தையின் நடத்தையை இவை பாதிப்ப தில்லை. பொதுவாக இத் தூம்பிலாச் சுரப்பிகள் மனவெழுச்சிகளுடனும் உடல் வளர்ச்சிகளுடனும் நெருங்கிய தொடர்புடையவை. உள்ளக் கிளர்ச்சிப் போருத்தப்பாடும் வளர்ச்சியும் இவற்றைப் பொறுத்தவை. இச் சுரப்பி கள் ஒன்ருேடொன்று இணைந்தே செயற்படுகின்றன. இவை யாவும் அடங்கிய எண்டோகிரீன் மண்டலத்தைப் பற்றிய உறுதியான உண்மைகள் யாவும் அறிதோறும் அறியாமை கண்டகிலே யிலுள்ளன. பொறிகள் பொறிகளின் முக்கியத்துவம் : எல்லா மனச் செயல்களும் பொறி களின் தூண்டல்களால் நடைபெறுகின்றனவாதலின், உளவியலில் பொறிகள் முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. நாம் செய்வன யாவும் காம் பெறும் பொறிகளைப் பொறுத்தே அமைகின்றன. நம்முடைய அறிவுமுழுவதும் நேர்முறையிலோ அன்றிநேரல் முறையிலோ பொறிவாயி லாகப் பெறும் செய்திகளின்மீது எழுந்ததேயாகும். வெறும் புலனுணர்வு மட்டிலும் அறிவன்றெனினும், புலனுணர்வினை அடிப்படையாகக் கொண்டே அறிவு மலர்கின்றது. நாம் பெற்றுள்ள பொறிகளின் வகை களைப் பொறுத்தே உலகை உணர்கின்ருேம்; நம்மையும் உணர்கின்ருேம். மக்கள் ஐம்பொறிகளைவிடக் குறைவான பொறிகளைப் பெற்றிருப்பின் அவர்கள் இவ் வுலகைப்பற்றிக் கொள்ளும் கருத்தினையும், அவர்களே வானெலி அலைகளையும், புதிர்க்கதிர்களையும், அண்டக்கதிர்களையும்' உணரக்கூடிய அதிகமான பொறிகளைப் பெற்றிருப்பின் அவர்கள் இவ் வுலகினைப்பற்றிக் கொள்ளும் கருத்தினையும் சிந்தித்துப்பாருங்கள். நம் 84. பால்நிலைச் சுரப்பிகள் - sex glands, 85 estsingssir – testes. 88 சூற்பைகள் ovaries. 8 இன கோளங்கள் - gonalds. 88 எண்டோகிரின் issir wib - endocrine system. 89ų########-X-rays. 90. sisir-ë &###sir-cosmic rays.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/68&oldid=778612" இலிருந்து மீள்விக்கப்பட்டது