பக்கம்:கல்வி உளவியல்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனும் சூழ்நிலையும் 49 கொள்வதைப்பற்றியே அறிந்து கொள்ளவேண்டும். பொறிகள் இல்லை யேல் பொருத்தப்பாடு முற்றிலும் நடைபெருது; நம்மையும் உலகத்தையும் பற்றிய அறிவு சிறிதேனும் நம்மிடம் உண்டாகாது. ஆகவே, அவற்றைப் பற்றி நன்கு அறிந்து கொள்வோம். காட்சிப் புலன்-கண் காட்சிப்புலன் மனிதன் பெற்றுள்ள பேறுகளுள் தலைசிறந்தது. அதற்கு உறு துணையாக இருப்பது கண் என்னும் உறுப்பு. "கண்ணிற் சிறந்த உறுப்பில்லை” என்பது ஆன்ருேர் வாக்கு. இதனால் கண்தான் தலைசிறந்த உறுப்பு என்ற உண்மை புலனுகின்றது. இராமன் காளைச் செல்லவேண்டும் என்ற இரண்டாவது வரத்தைக் கேட்கவேண்டாம் என்று கைகேயியை வேண்டும் தயரதன் கண்ணே வேண்டும் என்னி னும் ஈயக் கடவேன்’ என்று கூறும் வாக்கினை எண்ணிக் கண்ணின் சிறப் பினை உணர்க. . கண்ணின் அமைப்பு : நாம் கண் என்று வழங்குவது, கண்ணுண் டையையும், அதனை இயக்கிவைக்கும் கண் தசைகளையும். அஃது ஈரம் புலராதபடி நீரரும்பி கிற்கும் கண்ணிர்ச் சுரப்பிகளும் கூடியதோர் உறுப்பே யாகும். ஏறக்குறைய முற்று உருண்டை வடிவாயிருத்தலின் அதனேக் கண்ணுண்டை’’எனல் தகும். அஃது ஓரங்குலக் குறுக்களவுள்ளதாய்க் கட்குழியில் பொதிந்து நிற்கின்றது. இதனுடைய முன்புறத்தே மற்ருெரு சிறிய உண்டையை உள்ளழுத்திப் பொதிய வைத்தாற்போலக் கருவிழி' பிதுங்கித் தோன்றுகிறது. கண்ணுண்டை முப்போர்வை போர்த்து விளங்குகின்றது. க ண் ணு ண் ைட வி ன் காவற்குப் பயன்படும் வெள்ளை விழியே’’ அதனது திண்ணிய மேற்போர்வையாகும். இவ் வெள்ளை விழியோ கண்ணுண்டை முழுதும் சுற்றி கின்று, கருவிழியின் விளிம்பு வரைவந்து அங்கே கின்று விடுகின்றது. கருவிழியோ ஒளி நுழை' பொருளாகும். கண்ணுண்டையின் இடைகின்ற போர்வையோ குருதிக் குழாய்களும் கிற உயிரணுக்களும் தசைகளும் சேர்ந்த இருட்படா மாகும். அகப்போர்வையோ கண் நரம்பு படர்ந்து விரியும் புலப்படாமாகும். இது கண்-திரை' என வழங்கப் பெறும். (படம் 11 கண் உண்டை : 1. கண் இமை; 2, க்ரு விழி (cornea); 3. முன் கணிர்; 4. விழித்திரை; 9 * *gorgolsârsol. – eye ball. 98 & 65 g – eye-socket. 94sg965 g – cornea. 9*Goudraar slag - scelera, o e gaf goog - transparent. 9 கண். #leng- retina. க.உ.4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/70&oldid=778618" இலிருந்து மீள்விக்கப்பட்டது