பக்கம்:கல்வி உளவியல்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 கல்வி உளவியல் னில் பிம்பம் உண்டாகும் முறை : A B என்னும் பொருளின் பிம்பம் B A எனத் தலை கீழாகக் கண்.திரையில் விழுகின்றது.) இப் பிம்பம் தலை கீழாக இருப்பதுபோல் தோன்றுகின்றது. ஆயினும், மூளைக்கு இவ்வாறு மேல் கீழ் என்று இல்லை. அது வெளியில் பொருள் எங் நிலையில் உள்ளதோ அந் நிலையிலேயே காணச் செய்கின்றது. அங்ங்ணம் காண்பதற்கேற்ற நரம்பு அமைப்புக்கள் கண்ணில் அமைந்துள்ளன. கற்றலால் நம் பார்வைப் புலக்காட்சிகள் திட்டம் பெறுகின்றன. பிம்பத்தை மையப்படுத்துதல் : மானிடக் கண்ணின் வில்லை (கண். மணி) புகைப் படப் பெட்டியின் வில்லையைவிட நெகிழ்வானது. புகைப் படப் பெட்டியில் தெளிவான பிம்பம் பெறவேண்டுமானல் அதிலுள்ள துருத்தி போன்ற பாகம் முன்னும் பின்னுமாகத் தள்ளப்பெறுதல்வேண்டும். ஆளுல், கண்ணின் வில்லை பார்க்கப்பெறும் பொருளின் தூரத்திற் கேற்றவாறு தாகை உடனுக்குடன் பொருத்தமுறுகின்றது. வில்லையைப் பற்றியுள்ள மணித்தசைகள் தளர்ந்து அதைத் தட்டையாகச் செய்தால் தொலைவிலுள்ள பொருள்களைக் காணலாம்; அத்தசைகள் சுருங்கி வில்லை யைக் குவியச் செய்தால் அண்மைப் பொருள்கள் நன்கு துலக்க முறும். பார்வைத்துடிப்புக்கள் மூளைக்குச் செல்லும் விதம் : ஒளியின் கோலம் கண்ணின் உணர்ச்சி மிகுந்த கொள்வாய் முடிவுப் பகுதிகளைத் தூண்டும்பொழுது அங்கு வேதியல் எதிர்வினை தொடங்குகின்றது. இவ் வெதிர் வினை கண்-திரையினுள் நரம்பணுவுக்குக் கடத்தப்பெற்றுப் பார்வை நரம்பின் மூலம் மூளையை வந்தடைகின்றது. கண் திரையின் ஒவ்வொரு கொள்வாயிலுமிருந்தும் மூளையின் பார்வைப் பகுதிக்கு ஒரு நரம்பு நார்த்தொகுதி செல்லுகின்றது. இப் பகுதி மூளையின் பின் புறத் தில் அமைந்துள்ளது. பார்க்கும் பொருளின் ஒவ்வொரு பகுதியும் காட்சிப் பாகத்தின் பரப்பில் வீசப்பெறுகின்றது. அ. தாவது, பொரு வளின் ஒவ்வொரு மையமும் அதற்கியைந்தவாறு கண்-திரைக் கொள் வாய்க்கு ஒளியை எதிரொளிக்கின்றது.' இத் தூண்டற்கோலம் நரம்பு ாார்களால் மூளைக்கு எடுத்துச் செல்லப்பட அங்கும் அதற்கியைந்த தொரு நரம்பணுக் கோலம் தூண்டப்பெறுகின்றது. நரம்பணுவின் வேதியல் எதிர்வினத்துடிப்புக்கள் ஏறக்குறைய மணிக்கு 150 மைல் வேகத்தில் செல்லுகின்றன. அவற்றின் அதிர்வு-எண்' கொள்வாய் நிலையையும் ஒளித்துரண்டலின் உறைப்பையும் - பொறுத்தது. ஒளி x1, Gagus soro-chemical reaction. Its sigiarraf reflect. 11 *@*#lita-srsor - frequency. 1172.60psilo-intensity.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/75&oldid=778626" இலிருந்து மீள்விக்கப்பட்டது