பக்கம்:கல்வி உளவியல்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனும் சூழ்நிலையும் 55 அதிகமாயிருந்தால் இத் துடிப்புக்கள் விரைவில் ஒன்றையொன்று தொடர் கின்றன. அதிக ஒளியில்ை துடிப்புக்கள் பெரிதாகா , அவற்றின் தொடர்ச்சி வேகமே அதிகமாகும். ஒரு புலனுணர்ச்சி பெருந் தூண்டு தலால் வன்மை பெறக் காரணம் நரம்பணுக்கள் அதிகமாகத் துலங்கு தலால் அன்று ; விரைவாகத் துலங்குதலாலே யாகும். குருட்டிடமும் ஒளியிடமும் : கண் நரம்பு கண்ணின் பின் வழியாக வந்து பரவுகின்றது. அது கண்ணுக்குள்ளே புகுமிடத்தில் கட்புலப்படாம் சிறிதும் இல்லை. ஆதலின் அதனைக் குருட்டிடம் ' என்பர். கட்புலப் படாத்திலே உள்ள நடுவிடம், பாவையின் நடுவிடத்திற்கும் கண்மணி யின் நடுவிடத்திற்கும் நேரே அமைந்துள்ளது. அவ்விடம் மஞ்சள் நிறமாக உள்ளது. அது சிறிது உட்குழிந்தும் விள்ங்குகின்றது. அங்குத் தான் கூம்புகள் மிகச் செறிந்துள்ளன. அங்குக் கோல்கள் இல்லை. ஆகவே, அதுதான் நாம் பொருளின் பிம்பத்தை விளக்கமாகக் ஏற்றுக் கொள்ளும் இடமாகும். இதுவே ஒளியிடம்- எனப்படுவது. இந்த இட்த்தில்தான் நாம் ஒரு பொருளை நேரடியாகப் பார்க்குங்கால் ஒளிக் கதிர்கள் சாதாரணமாகக் குவிகின்றன. ஒளியிடத்தில் குருதிக் குழல் களும் இணைக்கும் இழையங்களும் இல்லை. காணப்படும் பொருள் நேரே கண்ணின் நடுவிடத்தில் விழுவதால் தான் பலகிறங்களையும் பிரித்தறிகின்ருேம். நடுவிடத்திலன்றி ஓரத்தில் விழுமானல் பல கிறங்கள் தோன்றுவதில்லை. விளிம்பருகே வரவர நிறத் தோற்றம் குறைகின்றது. தோன்றும் நிறமும் கிறைவு நிறமாகாமல் குறைவு நிறமாகின்றது. விளிம்பிலே வெளிறைத்தான் (gray) காண்கின் ருேம்; நிறத்தைக் காண்பதில்லை. கூம்புகள் நடுவிடத்தே நெருங்கியிருக்கின் றன ; விளிம்பிற்கு அருகுவரையில் சிறிதுசிறிதாகக் குறைந்து கொண்டே வந்து இறுதியில் ஒன்றுமில்லாமற் போகின்றது. கோல்கள் விளிம் பருகே மொய்த்துக் கொண்டிருக்கின்றன ; நடுவிடத்திற்குப் போகப் போகக் குறைந்து கொண்டே போய் இறுதியில் அவை இல்லாமற் போகின்றன. ஒவ்வொரு கண்-திரையிலும் 10,00,00,000 கோல்களும் 60,00,000 கூம்புகளும் இருக்கின்றன என்று கணக்கிட்டுள்ளனர். இவ் வமைப்பினைக்கொண்டு கூம்புகளே நிறத்தால் தாக்கப் பெறுகின் றன என்றும், கோல்களே வெளிற்ருெளியால் தாக்கப் பெறுகின்றன என்றும் சிலர் முடிவு கட்டியுள்ளனர். கிறங்கள் பலவேறுபாட்டை அடை வது போலவே, கூம்புகளும் பலவாக வேறுபட்டு விளங்குகின்றன. பகற் 118 குருட்டிடம் . blind spot. 119 36fu$u.tb - fovea.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/76&oldid=778628" இலிருந்து மீள்விக்கப்பட்டது