பக்கம்:கல்வி உளவியல்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கல்வி உளவியல் பலவித நஞ்சுக்களாலும் நோய்களாலும் ஏற்படலாம். கஞ்சுநீக்கு முறை களாலும் பலவகைப்பட்ட தசைப் பயிற்சிகளாலும் இந் நிலையைக் குண மாக்கலாம். தக்க வில்லைகளைக் கொண்ட மூக்குக் கண்ணுடியை அணிந்தும் இதனைச் சமாளிக்க முடியும். கேள்விப்புலன்-காது பார்வையைப் போலவே கேள்வியும் தொலைவிலுள்ள உள்துடிப்புக் களை ஏற்பதால் நேரிடுகின்றது. பார்வையைப்போலவே கேள்வியும் நம்மைச் சுற்றியும் நிகழ்வதை அறிய உதவுகின்றது. இரண்டு புலன் களும் தொலைவிலுள்ள தூண்டல்களை மேற்கொள்வதால், இந்த இரண்டு புலன் உறுப்புக்களும் தொலைவுப் புகுவாய்கள்' 'என வழங்கப்பெறும் பார்வையைப்போல, செவிப்புலன் நாம் வாழ்வதற்கு அவ்வளவு அதிமுக் கியமாக இராவிடினும், கேள்வி புரிந்து கொள்வதற்கும் பாதுகாப்பிற்கும் ஒரு முக்கியமான சாதனமாக அமைந்திருக்கின்றது. காட்சிப் புலனுக்கு ஒளியலைகள் தூண்டல்களாக அமைவனபோலவே, கேள்விப்புலனுக்குத் தூண்டல்களாக அமைபவை காற்றுத்துணுக்குகளின்* அதிர்வு களாகும்'. இந்த அதிர்வுகள் அலைவடிவில் நடைபெறுகின்றன. ஓர் அலேயின் வீச்சுக்கும் அதிர்வு-எண்ணுக்கும்' ஏற்றவாறு முறையே ஒலியுணர்ச்சியின் உறைப்பையும், சுருதியையும்' பெறு கின்ருேம் ஒலிக்குச் சுரகுணம் 40 என்ற மூன்ருவது பண்பும் உண்டு. சுரகுணம் அதிர்வினைக் கொடுக்கும் அலையின் அமைப்பினைப் பொறுத் தது. யாழில் எழும் சுரகுணத்திற்கும் குழலில் எழும் சுரகுணத்திற்கும் வேறுபாடு உண்டு. எனவே, ஒரே சுருதியுடனும் உறைப்புடனும் சீறியாழ் நரம்பிலிருந்தும் மூங்கிற் குழலிலிருந்தும் உண்டாக்கப் பெறும் சுரம்" சுரகுண வேறுபாட்டின் காரணமாக வேறுபட்ட இரண்டு விளைவுகளைப் பெற்றுள்ளன. . இனி, கேள்விப்புலனுக்கு இன்றியமையாததாகவுள்ள காதினை ஆராய் வோம். ஒலியானது நம்முள் புகுவதற்கு வாயிற்படியாக விளங்குவதே செவிப்பொறியாகும். வள்ளையைப்போலத் தலையின் இரு புறத்தும் தோன்றும் உறுப்பினை மட்டும் காது ' என்று உலகவழக்கில் வழங்கி வருகின்ருேம். ஆனல், செவிப்பொறி இக் காது மட்டுமன்று ; அது 1 88 Gğrås) sąù u Gauriùs sir - distance receptors. 134 Giggļš (55 år - particles. 1 3 5 gł#fsąs sir - vibrations. 1. se sst ära - amplitude. 1873;álfi al-gtssor - frequency, 1 s 8 o sopůų - loudness. 139 #(5# " pitch. 149 srợ Gaurib - timbre, 141 arrio - note.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/79&oldid=778634" இலிருந்து மீள்விக்கப்பட்டது