பக்கம்:கல்வி உளவியல்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனும் சூழ்நிலையும் 59 உள்ளே மண்டைக்குள்ளும் சென்று விளங்குகின்றது. அச் செவிப் பொறி மூன்று பிரிவுகளாக விளங்குகின்றது. அவற்றை நாம் புறச்செவி, இடைச்செவி, உட்செவி என வேறு பிரித்து வழங்குவோம். புறச்செவி : வெளியே தோன்றும் காதுமடலும்:42, வெளியிலி ருந்து செவிப்பறை வரை செல்லும் முக்கால் அங்குல நீளமுள்ள புறச் செவிக்குழலும் சேர்ந்த அமைப்பே புறச்செவி என்பது. அவை மண் டைக்குள்ளே போய் முடிகின்றன. இந்த இரண்டு உறுப்புக்களும் வெளியிலுள்ள ஒலி அலைகளைத் திரட்டி செவிப்பறைக்கு அனுப்பத் துணை சேய்கின்றன. செவிப்பறையே புறச்செவியின் உள் எல்லையாகும். இடைச்செவி : செவிப்பறைக்கும் உட்செவிக்கும் இடையேயுள்ள ஒரு குறுகலான அறையாகும் இது. இதற்குப் புறஎல்லையாகச் செவிப் பறையும், உள் எல்லையாகச் சிறியதோர் என்புச் சுவரும் திகழ்கின்றன. இவ்விரண்டு எல்லைகட்கும் இடையே மூன்று சிறிய எலும்புகள் ஒன்ருே டொன்று பிணைந்து தொடர்போல் விளங்கிச் செவிப்பறையையும் அவ் வென்புச் சுவரையும் பிணைக்கின்றன. அவற்றின் உருவ அமைப்பினைக் கெ அவை சுத்தி48, பட்டடை4, அங்கவடிச்: சிற்றெலும்பு படம் 15 : செவியின் அமைப்பைக் காட்டுவது. கள் என்று வழங்கப் பெறுகின்றன. இவற்றின் இணைப்பைப் படத்தில் காண்க. (படம் 15: மானிடச் செவியின் குறுக்கு வெட்டுத் தோற்றம். 1. புறச்செவி, 2. புறச்செவியினின்று செல்லும் வழி 3. செவிப் 142 sm 3 tot-so - pinna. 148 ### - hammer. 144 utlu-sol- – anvil. 145 glossulo - Stirrup.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/80&oldid=778637" இலிருந்து மீள்விக்கப்பட்டது