பக்கம்:கல்வி உளவியல்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 கல்வி உளவியல் பறை ; 4. செவிப்பறையில் ஒட்டிக் கொண்டிருக்கும் சிற்றெலும்பு களின் பாலம் , 5. உட்செவியின் ஒரு பகுதியாகிய அரைவிட்டக் குல்லியங்கள்; 6. கடுச்செவியை வெளிக்காற்றுடன் இணைக்கும் செவிக் குழல்; 7. உட்செவியிலுள்ள சுருள்வளை, 8. கேள்விகரம்பு.) இடைச் செவி யின் உள் எல்லையாக உள்ள என்புச் சுவரில் இரண்டு துளைகள் உள்ளன. ஒன்று வட்ட வடிவினது ; ஆதலின் அது வட்டப்புழை என்று வழங்கப் பெறும். மற்ருென்று முட்டை வடிவினது; ஆதலின் அது முட்டைப் புழை எனப் பெயர் பெறும். ஒவ்வொரு புழையையும் சவ்வு மூடிக்கிடக் கின்றது. சுத்தி எலும்பின் கைப்பிடி செவிப்பறையிலும் அங்கவடி எலும்பின் பிறை வளைவின் இருமுனையும் முட்டைப்புழையின் சவ்விலும் ஒட்டிக் கிடக்கின்றன. வெளி ஒலியால் செவிப்பறை அசையுமானல் அதனேடு ஒட்டியுள்ள என் புத்தொடரும் அசையும் , அவ்வென்புத் தொடர் அசையும்பொழுது முட்டைப்புழைச் சவ்வும் அசைகின்றது. இந்த நுட்பமான என்புகளை இணைக்கும் பக்தகங்கள் இறுகிப்போகுமாயின் அதிர்ச்சி பாதிக்கப்பெற்று அரைச்செவிடு நேரிடலாம். சில அதிர்ச்சி மட்டிலும் காற்றின் வழியாக அனுப்பப் பெறலாம். இடைச்செவி, நடுச்செவிக்குழல்’ என்னும் நீண்ட மென்மையான குழலினல் தொண்டையுடன் இணைக்கப்பெற்றுள்ளது. நாம் விழுங்கும் பொழுது அல்லது கொட்டாவி விடும்பொழுது காற்றை இந்தக் குழலுக் குள் பலமாகச் செலுத்திக் காதில் காற்றை நிறைவிக்கின்ருேம். இதல்ை செவிப்பறையின் இருபுறமும் காற்றின் அமுக்கம் சமப்படுகின்றது. சில சமயம் நாம் சளி பிடிப்பால் பீடிக்கப்பெற்றிருக்கும்பொழுது முன் தொண்டைவாயில்களைச் சளி அடைத்துக் கொள்ளுகின்றது. இந் நிலை நமக்குச் சிறிது அசெளகர்யத்தைத் தருவதுடன் இடைச்செவியிலுள்ள காற்றின் அமுக்கக் குறைவிலுைம் செவிப்பறை உட்புறமாக உப்பிக் கொண்டிருப்பதாலும் கேள்வியும் மந்தப்படுகின்றது. தொண்டையில் ஏற்படும் தொற்றினையொட்டி இடைச்செவியிலும் தொற்று ஏற்பட்டு காற்றிற்குப் பதிலாகச் சீழ் நிரம்பிவிடும். செவிப்பறையிலுள்ள மிகச் சிறிய சந்துவழியாக இந்தச் சீழ் வெளியேறி செவிப்பறையும் சுகப்பட்டு விடும். எனினும், அடிக்கடி நேரிடும் தொற்றுநோயில்ை செவிப்பறை யின் அதிர்ச்சியும் எலும்புகளின் அதிர்ச்சியும் குறைந்து போகக்கூடும். உட்செவி: இடைச்செவிக்கு உட்புறத்தே விளங்குவதுதான் உட் செவி, அவ் வுட்செவி, சுற்றுச் சுழற்சி வடிவாக அமைந்துள்ளது. அங்கே மூன்று வளையங்கள் சிக்கிக் கிடக்கின்றன. அவையே அதன்

      • reGă Gersâă 5geo - Eustachian tube.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/81&oldid=778639" இலிருந்து மீள்விக்கப்பட்டது