பக்கம்:கல்வி உளவியல்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனும் சூழ்நிலையும் 61. பின்புறம். அவையே நிலைப்புலப் பொறியாகவும் விளங்குகின்றன. ஆனல், முன்புறத்தே உள்ளவைதாம் ஒலிப்புலப்பொறிக்கு உயிரிட மாகும். முட்டைப்புழைக்கும் வட்டப்புழைக்கும் அடுத்தாற்போல் இரண்டு உண்டைவடிவமான பிதுக்கங்கள் தோன்றுவதால் இடையே ஒரு பள்ளம் காணப்படுகின்றது. இ.து உட்செவியின் ஒரு பிரிவு. மற்ருெரு பிரிவு நத்தையோடு போல் விளங்குகின்றது. பிரிகயிற்றுத்தலை முடிபோல உள்ளே புரையாகவும், அடியில் அகலமாகவும், மேலே போகப் போக அகலம் குறைந்து நுனியில் சிறுத்ததாகவும், சுற்றினுற்போல் அமைந்ததாகவும் இது விளங்குகின்றது; ஆதலின் இதனைப் புரிமுடி (spiral) எனலாம். இப் புரிமுடியின் உட்புறமானது நெடுக்கே மூன்று பிரிவு களாகப் பிரிந்து விளங்குகின்றது. இம் மூன்று குழைகளிலும் பாய்மம் நிரம்பியுளது. இம்மூன்று குழைகளும் அடியிலிருந்து நுனிவரையிலும் அந்தப் புரிமுடிபோலவே சுற்றிச் சுற்றி மேற்செல்லுகின்றன. இவற் றிலே ஒரு குழையானது முட்டைப் புழையினின்றும் வருகின்றது ; ஆத லின் அதனை முட்டைப்புழைக் குழை எனலாம். மற்றென்று வட்டப் புழையினின்று வருகின்றது; ஆதலின் அதனை வட்டப்புழைக்குழை எனலாம். புரிமுடியின் நுனியில் இவ்விரண்டு குழைகளும் ஒன்ருகக் கலக்கின்றன. மூன்ருவது குழையோ இவ்விரண்டையும்விட மிகமிகச் சிறியது. இதனைப் புரிமுடிக்குழல் என்று வழங்கலாம். இதனது மேற்புறத்தோல் இக் குழலினை முட்டைக்குழையினின்று வேறு பிரிக்கின் றது; இதனது கீழ்ப்புறத்தோல் இதனை வட்டப்புழைக் குழையினின் றும் வேறு பிரிக்கின்றது. மயிர்க் கருவமைப்பு: இதன் கீழ்ப்புறத்தோலில்தான் கோல்வடிவ மான நரம்பமைப்புக்களும் மயிர்க்கரு அமைப்புக்களும் உள்ளன. இவையே. ஒலித்தூண்டலால் தாக்குறுபவை. இவையே செவிப்புலநரம்போடு தொடர்பு பட்டு உள்ளவை. ஒலிஅலை புரிமுடியினுள் செல்லும்பொழுது இவை அவ் அலைக்கேற்ப அசைந்து நரம்புக் கிளர்ச்சியை உண்டு பண்ணுகின்றன. புரிமுடியின் அடிப்புறத்திலிருந்து நுனிவரை, இம் மயிர்கள் சிறுகச்சிறுக முறையே நீண்டுகொண்டு வருகின்றன. ஒலி யால் அசையக்கூடிய தட்டைக் கம்பிகள் பலவற்றைப் பலவகையாக ஓரிடத்தே நிரலே புதைத்து வைத்து, வெவ்வேறு வகையான ஒலிகளை எழுப்புவோமானல், ஒவ்வோர் ஒலி ஒவ்வோரு வகையான கம்பிகளை அசைப்பதைக் காண்போம். அவ்வாறே, வெவ்வேறு ஒலியலைகள் இயங்கும்பொழுது வெவ்வேறு நீளமான அம் மயிர்க்கரு அமைப்புக் களும் இயங்குகின்றன. ஒலியலைகளின் உயர்ச்சிக்கேற்றவாறு இம் மயிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/82&oldid=778641" இலிருந்து மீள்விக்கப்பட்டது