பக்கம்:கல்வி உளவியல்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 கல்வி உளவியல் அறியக் கூடியது. நாக்கின் பின்பகுதி உவர்ப்புச் சுவையை அறிகின்றது. காக்கின் இரண்டு பக்கப் பகுதிகளும் கைப்பையும் புளிப்பையும் நன்கு உணர்கின்றன. நாக்கின் மேற்பகுதியில் கூர்மையான உணர்ச்சி இல்லை; அவ்விடத்தில் சிறிது நேரம் கசப்பு மருந்தையும் வைத்திருக்க லாம். நாம் மருங்தை விழுங்கும்பொழுதுதான் அந்தக் கசப்பை அறியமுடியும். ஏதாவது ஓர் உணவை உண்ணும்பொழுது நாம்பெறும் சுவையனுபவம் இந்த நான்கு முதல்நிலைச் சுவை உணர்வுகளுடன்-பல் வேறுபட்ட வேறு சுவைப் புலனுணர்வுகளுடன்-கலந்தே பெறுகின்ருேம். (எ-டு.) சூடான காபி. காபியின் சுவை உவர்ப்பு, சருக்கரை சேர்ந்திருப்ப தால் இனிக்கின்றது. ஏனைய அனுபவங்கள் யாவும் சுடுபுலன், தொடுபுலன். நாற்றப் புலன் ஆகியவற்ருல் ஏற்படுபவையே. எல்லாரும் எல்லாச் சுவைகளையும் சம அளவில் அறிந்து அனுபவித் தல் இல்லை. எவ்வளவு பட்டறிவு பெற்றிருந்தாலும், ஒரு சிறு பகுதியின ரிடம் சுவையறியும் தன்மை சரியாக அமைவதே இல்லை; பல்வேறு நிலை களில் அவர்கள் சுவையை அறிய இயலாதவர்களாக உள்ளனர். இவர்கள கிறக் குருடர்களுடன் ஒப்பிடலாம். ஒருக்கால் அவர்களிடம் பிறவியிலேயே சில குறிப்பிட்ட புகுவாய்கள் வளர்ச்சியுருமல் இருத்தலும் கூடும், சுவைப்புலனும் தூண்டலைக் கொள்ளும் பல சாதனங்களுள் ஒன்று. உலக அறிதலுக்கு இது முதல் அடியாகும். நாற்றப்புலன்.மூக்கு : மணம் அறியும் உணர்ச்சி மனிதனுக்கு மிகவும் குறைவான அளவில் வேண்டப் பெறுவது; ஆனால், அது அவன் சூழ்நிலைகளைச் சரியாக அறிந்து கொள்வதற்குத் துணை செய்கின்றது. மக்களிடை இப்புலன் சிறப்பு நிலையுற்று விளங்கவில்லை. நாயும் எலியும் மோப்பம் பிடிப்பதில் தலை சிறந்தன. அவற்றிற்கு மக்கள் அவ் வழியில் தோற்றுபோகின்றனர். காற்றப்புலன் உணவுப் பொருளைத் தெரிந்தெடுப் பதற்குப் பயன்படுகின்றது; ஆதலின் இது வாய்க்கருகே இடம்பெற்றுள் ளது. மோப்பத்தினலேயே குமட்டும் பொருள்களை அறிகின்ருேம். மக்கள் உயர்நிலை அடைய அடைய இப் புலன் தன் பெருமையை இழந்து வருகின்றது; என்ருலும், மண்டையில் முதல்முதல் பிரிந்த நரம்பு இப்புல நரம்பே என்பதை மறத்தலாகாது. நாற்றப் புலனின் அண்ணனே சுவைப் புலன். இவை இரண்டும் தொடக்கத்தில் உணவுப் புலன் அல்லது மருந்துப் புலன் என ஒன்ருகவே விளங்கின. காட்சிப் புலன், கேள்விப் புலன் ஆகியவை போன்றே இதுவும் தொலைவுப் புலனே' நவீன வாழ்விற்கு இதுவும் மிகவும் வேண்டப்படுவது. . - 149 Gigiròsui Housir - distance senses.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/85&oldid=778647" இலிருந்து மீள்விக்கப்பட்டது