பக்கம்:கல்வி உளவியல்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனும் சூழ்நிலையும் 65 முகர்தலால் விளங்கும் காற்றப்புலனுக்கேற்ற பொறி மூக்கு. உயிர்ப் போடு தொடர்பு பட்டிருப்பதால் உயிர்ப்பென்றும் இப் புலனை வழங்குவர். ' கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புல இன்பம்” என வள்ளுவப் பெருமான் வாக்கு வருதல் காண்க. இதற்குப் புகுவாயோ சில உயிரணுக்கள் ஆகும். அவை மூக்கினுள் அமைந்த ஈழைத் தோலில் (சளிச் சவ்வு) பொதிந்துள்ளன (படம்-17). அவை கிட்டத்தட்டக் கண் இட்டத்தில் அமைந்திருக் கின்றன. அமைப்பிலும் செயலிலும் அவை காக்கிலுள்ள சுவை பரும்பு களை ஒத்திருக்கின்றன; வடிவில் வடிக்கதிர்போன்று விளங்குகின் றன. இவற்றின் மேற்பரப்பிலுள்ள அதிநுட்பமான உரோம அமைப்புக் கள் மனத்துடன் தொடர்பு கொள்ளுகின்றன. A மணம் உணரும்

to-soil &&ér :o-o- واژه :

/ వ్రై AW * ఘ్ర్వాడ్త உயிர்ப்பொருள்கள், உயிரல் பொருள்கள் என்பவற்றிலிருந்து எழும் நுண்பொடிகள் காற்றில் பரவு கின்றன. அக் காற்றை நாம் உயிர்க் கும்பொழுது அது நம் மூக்கினுட் புகுந்து உரோம அமைப்புக்கள் மூலம் ஈழைத் தோலில் புதைந்துள்ள உயிரணுக்களைத் தாக்கி வேதியல் வினையைப் புரிகின்றன. அதனல் அவை கிளர்ச்சியுறுகின்றன. இக் கிளர்ச்சி நரம்பு நார்வழியாக மூளையி லுள்ள காற்றப் புல எல்லேயை அடைகின்றது. படம் 17 : மன உறுப்புக்கள். முகரும் பொறி சிக்கலின்றி இருந்தாலும் காற்றப் புலனின் வகை களோபலவாகவே தோன்றுகின்றன. கிறவகை, ஒலிவகை முதலியவை போல் காற்றவகைகள் ஒற்றுமைப்பட்டுப் படிப்படியாக ஒரு தொடர்ச்சி யாக விளங்கவில்லை. காற்றப்புலன் மக்களிடை சிறந்து விளங்கா மையால் அதைப்பற்றி ஆராய்வோரும் அதன் வேற்றுமைகளை வகை செய்து இதுவரை முடிவுகட்டவில்லை. புதுப்புது மருந்துக்களும், புதுப் புதுப் பழங்களும் புதுப்புதுப் பூக்களும் புதுப்புது மணத்தைத் தெரிவிக் கின்றன. க.உ.-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/86&oldid=778649" இலிருந்து மீள்விக்கப்பட்டது