பக்கம்:கல்வி உளவியல்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 கல்வி உளவியல் இடையே அமைந்து கிடக்கின்றன. இந்தச் சூட்டு நிலைகளுக்கு மேலோ கீழோ காம் பெறும் துலங்கல் வலியுணர்ச்சியே ; அப்பொழுது இழையங் களின்" சிதைவு நேரிடுகின்றது. குளிர்புலனும் சுடுபுலனும் தொடுபுலன் அளவுக்குச் சிறந்தன அல்ல என்ருலும், அவை நம் துய்த்துணர்வைப் பலவகைச் சுவையாக்குவதற்குப் பயன்படுகின்றன. நொப்புலன் : கிட்டத்தட்ட உடலின் எல்லாப் பகுதிகளின் எல்லாவித இழையங்களுடன் இப் புலன், உணர்ச்சியை எழுப்புதல் கூடும். தோலின் மீது கொப்புலப் புகுவாய்கள் அதிகமாக உள்ளன. தோலின் அருகே முடியும் நரம்புகளை நேரே தீங்கு விளைவிக்கக் கூடிய எப்பொருளும் (தூண்டல்கள்) தாக்கும்பொழுது நோவு எடுக்கின்றது. இக் கிளர்ச்சி மூளையிலுள்ள கோவெல்லையில் சென்று முடிகின்றது. நோவானது தனி யாக எழுவதில்லை; வ்ேறு புலன்களோடு சேர்ந்தே எழுகின்றது. மிகவும் சுட்டாலும், மிகவும் குளிர்ந்தாலும், மிகவும் உறுத்திலுைம் நோவெடுக் கின்றது. சுடுபுலப்புகுவாய் முதலியவற்றில் தூண்டல் தாக்கும்பொழுது அப் புகுவாய்கள் கொள்ளமுடியாது மிகுந்த கிளர்ச்சி சுற்றிலும் பரவித் தனியே கிடக்கும் நரம்புகளைத் தாக்குகின்றது; அதனுல் கோவெடுக் கின்றது. ஆகவே, நோவுகள் அவை எழும் இடத்தாலும், நீடிக்கும் கால அளவாலும், பரவும் இட அளவாலும், உடன் எழும் புலன்களாலும் வேறுபட்டுப் பல பெயர்களைப் பெறுகின்றன. கீறுதல், குத்தல், வெட்டு, கடி, புண் என்பன தொடுபுல வகையால் பெயர் பெற்ற நோவுகள். சுடு புண் என்பது சுடுபுல வகையால் பெயர்பெற்ற நோவு. வயிற்று நோய், குடர்நோய் என்பன அவை எழும் இடவகையால் பெயர் பெற்றன. சுளுக்கு, தசையிறுக்கம் என்பன தசைப்புலன் வகையால் பெயர் பெற்றன. இப் புலன் துன்பமாகவே விளங்குகின்றது. இதன் சிறப்பியல்பு களைப் பிரித்தறிவது அருமையினும் அருமை. கண்ணுேய்க்கும் தோல் மேல் உள்ள புண்ணுேய்க்கும் வேற்றுமை தோன்றுகின்றது. ஆளுல், அவ் வேற்றுமை கொப்புல வேற்றுமை அன்று அதன்ேடெழும் தொடுபுலன் தசைப்புலன் இவற்றின் வேற்றுமையாகும். சுறீலெனக் குத்தும் கோவிற்கும் பரந்து மழுங்கலான கோவிற்கும் உள்ள வேற்றுமையும் நொப்புல வேற்றுமையன்று. குத்தல் எடுக்கும் கோவில் சில நரம்புகளில் நோவு ஒருமுகப்படுகின்றது; பரந்த கோவில் பல நரம்புகளிலும் கிளர்ச்சி பரவுகின்றது. துடிக்கும் நோவிற்கும் நீண்டகாளாய்த் தொடர்ந்து வரும் கோவிற்கும் உள்ள வேற்றுமை காலத்தால் எழுந்த வேற்றுமையே. 182இழையங்கள்.tissues.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/89&oldid=778655" இலிருந்து மீள்விக்கப்பட்டது