பக்கம்:கல்வி உளவியல்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனும் சூழ்நிலையும் 71 இந்த கிலைப்புலனும் இயக்கப்புலனும் உள்ளமையால்தான் நடத்தல், இயங்குதல் முதலியன பழக்கமாகின்றன. உட்புலன் பசி, நீர்விடாய், வாந்தி, பால்-உணர்வுகள் போன்ற புலனுணர்ச்சி கள் யாவும் உட்புலன்கள்' என்று வழங்கப்பெறுகின்றன. அவை யாவும் உடலின் உட்பகுதிகளில் எழுகின்றன. இப் பொறியுணர்ச்சிகள் யாவும் உடலின் அடிப்படையான தேவைகளுடன் மிக நெருங்கிய உறவு கொண்டுள்ளன ; ஆகவே, அவை செயலுக்குரிய உள்துண்டல்கள்: அல்லது உந்துநிலைகளை" உண்டாக்குகின்றன. சிறப்பாக அவை உயிரியின் நலத்தையும் அதன் குருதியை கன்னிலையில் இருத்தலையும் கிலைநிறுத்துவதில் பங்கு பெறுகின்றன. சில சமயம் இயக்கப்புலன், கிலேப்புலன், ஊற்றுப்புலன் ஆகியவற்றுடன் உட்புலன் சேர்ந்து உடற் புலன்கள்' எனவும் வழங்கப் பெறுகின்றது. புலப்பயிற்சி புலன்களே அறிவின் வாயில்கள் என்பதை நாம் அறிவோம். ஆதலின், குழந்தைக் கல்வியில் புலப்பயிற்சிக்குச் சிறப்பிடம் அளிக்கப் பெற்றுள்ளது. புலன்களைப் பயன்படுத்திப் பொருள்களை அறியாவிடில், குழந்தை கள் தம் எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் தகுந்த அடிப்படையின்றி, பல தவருன கருத்துக்களையுடையவராவர். நாட்டுப்புறச் சூழ்நிலையையே அறியாத நகர்ப்புறச் சிறுவர்களில் கெல்காய்ச்சி மரம் என்போரும் உண்டு. ஏதாவது ஒரு பொருளே (எ.டு.-பந்து) ஒரு குழந்தையிடம் கொடுத்தால், அது இயல்பாகவே அதைப் பார்க்கிறது ; ஓசைப்படுத்து கிறது; தொட்டுத்தடவுகிறது ; அமுக்குகிறது ; கடித்துச் சுவையறி கிறது : முகர்ந்து மணம் அறிகிறது ; உடைக்கவும் முயல்கிறது. அது எல்லாப் புலன்களையும் பயன்படுத்திப் பொருளின் தன்மையை அறிய முயல்கின்றது. பள்ளிக்கு வருமுன் சிறுவன் கற்கும் முறையும் இதுவே. பள்ளிக்கு வந்தவுடனும் அவன் இம் முறையையே மேற்கொள்வான் என் பதை மறத்தலாகாது. இங்ங்ணம் புலன்களின் பயிற்சியே இயற்கை யன்னையின் கல்விமுறை என்பதை மாண்டிசோரி, பிராபெல் போன்ற 1*02 Lusosur-Organic Sensation. ****.sirgissouri–60-inner urge. 1 * **-āgātā&-drive. * **a-l-fibus) or-somesthetic or body Sensation.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/92&oldid=778663" இலிருந்து மீள்விக்கப்பட்டது