பக்கம்:கல்வி உளவியல்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 கல்வி உளவியல் கல்வி நிபுணர்கள் கன்கு அறிந்து புலப்பயிற்சிக்கு முதலிடம் அளித்துள் ளனர். மாண்டிசோரிக் கல்வி முறை புலப் பயிற்சியை வற்புறுத்திக் கூறுகின்றது. பள்ளியில் எழுதவும் படிக்கவும் மட்டில் வாய்ப்புக்கள் கொடுத்தல் போதாது. சொற்களுக்குமுன் பொருள்கள்’ என்ற கொள்கை குழந்தைக் கல்வியின் உயிர்காடியாக இருத்தல் வேண்டும். புலப் பயிற்சியின் நோக்கம் : புலப்பயிற்சியால் புலன்களின் திறமையை அதிகரிக்கக் கூடுமா ? என்ற வின எழுதல் கூடும். இயற்கை யாகக் குழந்தையிடம் ஏற்பட்டுள்ள திறமையை, அஃதாவது பொறிகளின் கூர்மையை, அதிகரிக்க முடியாதுதான்; எனினும், பொறிகளால் அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றலைப் பயிற்சியினல் வளர்க்கலாம்;காட்சிகளை வேறு பிரித்து அறிந்துகொள்ளும் திறனை அதிகரிக்கவும் செய்யலாம். இயற் கையில் ஏற்பட்டுள்ள திறமைகளைப் பயன்படுத்தும் வாய்ப்புக்கள் எல்லாப் புலன்களுக்கும் கிடைப்பதில்லை. ஆகவே, பல திறப்பட்ட பயிற்சிகளின் மூலம் எல்லாப் பொறிகளும் சுறுசுறுப்பாகச் செயலாற்றும் வாய்ப்புக்கள் தருதல் வேண்டும். உண்மையில், புலப்பயிற்சி என்பது புலத்தின் வாயிலாக மனத்திற்கு அளிக்கப் பெறும் பயிற்சியே என்பது தெளிவாகும். கண்ணே யோ செவியையோ பழக்குவதென்பது உண்மையில் மனத்தைப் பழக்குவ தாகவே கொள்ள வேண்டும். தக்க புலப் பயிற்சியினல் மூளையின் மையங்கள் இயைபு பெற்று மனமும் பண்படைகின்றது. மூன்று வயதி லிருந்து ஏழுவயதுவரை குழந்தைகட்குப் புலப்பயிற்சி அளிப்பதற்குரிய காலம் என்று உளவியல் அறிஞர்கள் கண்டறிந்திருக்கின்றனர். மாண்டி சோரி முறையில் புலப்பயிற்சிக்கு வேண்டிய சாதனங்கள் அழகாக அமைந் துள்ளன. புலப்பயிற்சியுடன் மொழியறிவையும் தொடர்புபடுத்தப் பெற்றுள்ள அம்மையாரின் புலப்பயிற்சித் திட்டம் சிறந்து விளங்கு கின்றது. தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளிகளிலும் பொருள்களைப் புலன்கள் வாயிலாக அறியும் வாய்ப்புக்களைக் கொடுக்கலாம். பொருட்காட்சிச் சாலை, பூங்கா, கடற்கரை, மிருகக் காட்சிச் சாலை, மலைகள், தொழிற்சாலை கள் முதலிய இடங்கட்குக் குழந்தைகளை அழைத்துச் சென்று பொருள் களை நேராக அறியும் வாய்ப்புக்கள் அளிக்கலாம். கைத்தொழில்கள் மூலம் அளிக்கப்பெறும் கல்வி ஓரளவு இதற்குத் துணை செய்கின்றது. உருவங் களே வரைதலும், அமைத்தலும், பாய்கள் பின்னுதலும், மைக்கூடு, கப்பல், விமானம், குருவிபோன்றவைகளைக் காகிதங்களால் செய்தலும், களிமண் வேலைகளும், நூற்றல், நெய்தல் போன்ற தொழில்களும் புலத்தின் இயக்கத் திற்குத் துணை செய்பவை. இவ்வாறு.காட்சிப் பொருள்களை உணர்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/93&oldid=778665" இலிருந்து மீள்விக்கப்பட்டது