பக்கம்:கல்வி உளவியல்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும் 77 தால், ஒரு முடிவிற்கும் வரமுடியாது. பல்வேறு விதமான மக்கள் மகிழ்ச்சியுடனும் மகிழ்ச்சியில்லாமலும் திருமணம் புரிந்து கொள்வதைத் தான் காண்கின்ருேம். சில நல்லிணக்கமான பண்புடையவர்கள் மகிழ்ச்சி யில்லாமலும், அப்பண்பு அமையப் பெருதவர்கள் மனநிறைவுடனும் வாழ் வதைப் பார்க்கின்ருேம், வலுவந்த மாணவர்களும், விட்டுக்கொடுப்போரும், எளிதில் சினங்கொள்வோரும், சுறணையற்ருேரும், நிலையானவரும் நிலை யற்றவரும்-மண வாழ்க்கையில் ஒன்றி மகிழ்வுடன் இருக்கின்றனர்; அன்றி, மகிழ்ச்சியற்றவர்களாகவும் இருக்கின்றனர். இதற்குக் காரணம் ஆளுமைகள் மோதுதலைப் பொறுத்தது என்றுதான் சொல்லவேண்டும் ஒரளவு பிற காரணங்களும் இருக்கலாம். பள்ளியில் பயிலும் மாளுக்கர்களிடையே ஆளுமை வேற்றுமைகளைக் காணலாம். ஓரளவு கட்டுப்பாடுகள் அமைந்த வகுப்பறையிலும் இவற் றைப் பார்க்கலாம். சிலர் திட்டமான கருத்துடையவர்களாகவும் சிலர் வாய் திறக்கக் கூட அஞ்சுபவர்களாகவும், சிலர் பிடிவாத முடையவர் களாகவும், சிலர் தன்னம்பிக்கையற்றவர்களாகவும் இவ்வாறு பல்வேறு. விதமாய் இருக்கக் காணலாம். வகுப்பறைக்கு வெளியே, ஓரளவு கட்டுப்பாடற்ற நிலையில் இந்த ஆளுமையின் கோலங்கள் இன்னும் தெளிவாகப் புலணுகும். அங்கு மாளுக்கர்களின் இயற்கை நிலை வெளிப்படுகின்றது. ஒருவனிடம் தன் னெடுப்பு மீதுர்ந்து நிற்கின்றது ; அவன் பேச்சில்ை பிறரை ஆளமுயல் கின்ருன். இன்னொருவன் எளிதாகப் பிறருடன் ஒத்துப் போகின்றன் ; விட்டுக்கொடுக்கின்றன். இந்தப் பண்புகள் எல்லா கிலைகளிலும் முற்றிலும் வெளிப்படுவதில்லை. இறுமாப்புடையவன் என்று பலராலும் கருதப் பெறும் ஒருவனுடன் நெருங்கிப் பழகும்பொழுது அவன் அன்பும் ஆர்வ மும் உடையவனாக இருத்தல் தெரிகின்றது. இங்ங்ணம் ஒவ்வொருவனும் பலவகையான சமூகச் சூழ்நிலைகளில் எங்ஙனம் துலங்குகின்றன் என் பதைக் கொண்டே அவனுடைய ஆளுமையை அறிதல் கூடும். ஆளுமையில் பல கூறுகள் அமைந்துள்ளன என்பதை மேலே கண்டோம். ஆனால், சமூகக் கூறுகள் தனிச் சிறப்புடையவை. சில உளவியலார் மக்களை அகமுகர்’ என்றும் புறமுகர்’ என்றும் இருகூறிட் டுப் பேசுவர். பூங் போன்ற உளவியல் அறிஞர்கள் இவர்களுடைய பண்புகளை ஆராய்ந்து குறித்து வைத்துள்ளனர். அகமுகர் என்போர் உள்நோக்கியவர்; சதா கனவு கண்டுகொண்டிருப்பர்; எதிர்காலத் திட்டம் 4 ss(psst - introvert. * 4sogpst - extrovert. 6gré - Jung.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/98&oldid=778676" இலிருந்து மீள்விக்கப்பட்டது